ரிஷாத், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முறைப்பாடளிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு

0 685

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்றைய தினம் காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டும், பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரிவில் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோருக்கு எதிரான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள கடந்த 4 ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரொருவரின் கீழ் இந்த முறைப்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!