ஹிஸ்புல்லாஹுக்கு எதிராக ஜனாதிபதி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் – எஸ்.பி.திஸாநாயக்க

0 766

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடியில் அண்மையில் அண்மையில் தெரிவித்த கருத்தான, மன்னிக்க முடியாததொரு கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அவரது செயற்பாடுகள் தொடர்பில் தான் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அவர் எமது கட்சியின் உறுப்பினர். கட்சியின் மத்திய செயற்குழவினதும் உறுப்பினர். எனினும், இலங்கையில் மாத்திரம் நாம் சிறுபான்மையினர், உலகளவில் நாமே பெரும்பான்மையினர் என்று ஹிஸ்புல்லாஹ் கூறியமை தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பாராதூரமானதும், மக்களை கோபமடையச் செய்வதுமான பேச்சாகும்.ஆகையால் அவர் தொடர்பில், கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!