பயங்கரவாதி அசாத்தின் சடலத்தை காத்தான்குடியில் அடக்க அனுமதி இல்லை ! நகர சபை தீர்மானம்

0 1,038

                                                                                     (காங்கேயனோடை நிருபர்)
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உடற்பாகங்களை காத்தான்குடியில் அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதில்லையென காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இன்று (12) புதன்கிழமை காத்தான்குடி நகர சபையின் விசேட அமர்வு நடைபெற்றபோதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட அமர்வின் போது கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக்குண்டுத் தாக்குதலை நடத்தி பொதுமக்களைக் கொலை செய்த பயங்கரவாதியான அசாத் என்பரின் உடற் பாகங்களை எக்காரணம் கொண்டு காத்தான்குடியில் அடக்கம் செய்வதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்குவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாரியான பயங்கரவாதி அசாத்

அத்துடன் உள்ளூராட்சி திணைக்கத்தினால் அரபு வசனங்களை அகற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல் கடிதத்தின் படி அது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் அரபு வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதால் ஏற்படும் செலவுகள் தொடர்பாக உள்ளுராட்சி திணைக்களத்திடம் எழுத்து மூலம் அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளுதல்.

மட்டக்களப்பு மாநகர சபையினால் காத்தான்குடி நுழைவாயில் வரவேற்பு வளைவில் எழுதப்பட்டுள்ள அரபு வசனத்தை அகற்ற வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பாக காத்தான்குடி நகர சபைக்குள் இந்த நுழைவாயில் வளைவு வருவதால் அது தொடர்பில் காத்தான்குடி நகர சபை தீர்மானிக்கும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த விசேட அமர்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!