இலங்கை குண்டுதாரிகளுடன் தொடர்பில் இருந்த 7 பேரின் வீடுகள் தமிழகத்தில் சோதனை

0 165

இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் எனக்கருதப்படும் இந்தியாவைச் சேர்ந்த  7 சந்தேகநபர்களின் வீடுகளை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்தினர் (என்.ஐ.ஏ) சோதனையிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

இன்று காலை 6 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனையில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த மேற்படி இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அங்கிருந்த சந்தேகநபர்களின் தொலைபேசி மற்றும் கணினிகள் என்பன என்.ஐ.ஏவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 பேரும் இலங்கையில் தாக்குதல் நடத்திய தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்புடன் சமூகவலைத்தளங்கள் மூலமாக தொடர்பில் இருந்தமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!