ரிஷாத், அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக 21 முறைப்பாடுகள்!

0 758

                                                                                               (எம்.எப்.எம். பஸீர்)
பதவி துறந்த முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகிய மூவருக்கும் எதிராக பொலிஸ் தலைமையகத்துக்கு 21 முறைப்பாடுகள் இன்று (12) வரை கிடைக்கப் பெற்றிருந்தன.

கடந்த நான்காம் திகதி முதல் இன்று மாலை நான்கு மணி வரை குறித்த மூவருக்கும் எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்ய பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் இரு பொலிஸ் அத்தியட்சகர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழுவுக்கே நேற்று பிற்பகல் 3.00 மணி வரை இந்த 21 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றிருந்தன. அத்துடன் நேற்று மாலை 6.00 மணியாகும் போதும் மேலும் சில முறைப்பாடுகள் எழுதப்பட்டுக்கொண்டிருந்ததை பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர உறுதி செய்தார்.

இன்று மூன்று மணி வரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் அதிகமானவை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகவே கிடைக்கப் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!