களு அஜித் கொலையுடன் தொடர்புடைய பிரதானநபர் கைது!

0 440

ஜாஎல, ஏக்கல, மஹவத்த பிரதேசத்தில் பாதாள உலகக்குழு உறுப்பினர் கிரிஷாந்த அஜித் குமார அல்லது மினுவாங்கொட களு அஜித் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான ஹீனடியன சங்க என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காலிங்க கசுன் குமாரசிங்க சில்வா என்ற இயற்பெயரைக் கொண்ட ஹீனடியன சங்க எனப்படும் 31 வயதான இச்சந்தேகநபர், நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்றுகாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர். பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றும் 20 தோட்டககளும் மீட்கப்ப்ட்டன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!