‘எமக்கெல்லாம் நாறல் மருந்து, ராஜிதவுக்கு சிங்கப்பூரில் சிகிச்சையா? மன்னாரில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்!

0 386

                                                                    (எஸ்.றொசேரியன் லெம்பேட்)
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனராத்னவுக்கு எதிராக மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடி இன்று (12) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பகல் 1 மணியளவில் பதாதைகளுடன் ஒன்று கூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடங்கள் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட வைத்தியர்கள் மூன்று மொழிகளிலும் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குறிப்பாக,  வடக்குக்கு வைத்தியர்கள் வேண்டாமா?, நீரிழிவு நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம்., ராஜித்த வேண்டாம், புற்று நோய்க்கு தரம் குறைந்த மருந்துகள் வேண்டாம், எமக்கெல்லாம் நாறல் மருந்து ராஜிதவுக்கு சிங்கப்பூரில் சிகிச்சையா?, உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை வைத்தியர்கள் ஏந்தியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!