‘பெட்டிகலோ கெம்பஸ்’ தொடர்பில் பொலிஸில் ரதன தேரர் முறைப்பாடு

0 1,214

‘பெட்டிகலோ கெம்பஸ்’ எனும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு எதிராக பொலிஸாரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலியே ரதன தேரர் முறைப்பாடு செய்துள்ளார்

மட்டக்களப்பிலுள்ள பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று அவர் முறைப்பாடு செய்தார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் நடவடிக்கைகள் தொடர்பாக தான் முறைப்பாடு செய்ததாக ஊடகங்களிடம் ரதன தேரர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவிலிருந்து 100 மில்லியன் டொலர் தனக்கு கிடைத்ததாக ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார். இப்பணம் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய அமைப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டதா அல்லது சொந்தத் தேவைகளுக்hக பயன்படுத்தப்பட்டதா என ரதன தேரர் கேள்வி எழுப்பினார

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!