செரீனாவுடன் இணைந்து விளையாட தியெம் விருப்பம்

0 375

விம்­பிள்டன் டென்னிஸ் கலப்பு இரட்­டையர் போட்­டியில் செரீனா வில்­லி­யம்­ஸுடன் இணைந்து விளை­யாட விரும்­பு­வ­தாக அவுஸ்தி­ரே­லிய வீரர் டொமினிக் தியெம் தெரி­வித்­துள்ளார்.

தியெம், செரீனா

டென்னிஸ் நட்­சத்­திரம் செரீனா வில்­லி­யம்­ஸுடன் இணைந்து விளை­யாடக் கிடைப்­பது மகிழ்ச்சி தரு­வ­தாக உலக டென்­னிஸின் ஆண்­க­ளுக்­கான ஒற்றையர் தர­வ­ரி­சையில் நான்காம் இடத்தை வகிக்கும் டொமினிக் தியெம் தெரி­வித்தார்.

“23 தட­வைகள் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்­லி­யம்­ஸுடன் இணைந்து விளை­யாட கிடைப்­பது மகிழ்ச்­சி­க­ர­மான விட­ய­மாகும்.

அடுத்து நடை­பெ­ற­வுள்ள விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­யிலோ அல்­லது ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டி­யிலோ

அண்­மையில் நடை­பெற்று முடிந்த பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் வெளிப்­ப­டுத்­திய ஆட்­டத்­தி­றனை விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­யிலும் வெளிப்­ப­டுத்த முடியும் என அவர் நம்­பிக்கை வெளி­யிட்டார்.

அண்­மையில் நடை­பெற்று முடிந்த பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் போட்­டியின் ஆண்கள் ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் களிமண் தரை டென்னிஸ் மன்னன் என வர்­ணிக்­கப்­படும் ஸ்பெய்னின் ரபாயல் நடா­லிடம் தோல்­வி­ய­டைந்து உப சம்பியனா னார்.

கடந்த வருடமும் இதை ஒத்த முடிவு பதிவாகியி ருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!