பிரெஞ்சு பகி­ரங்க டென்­னிஸில் தவ­றான விப­ர­த்­துடன் சம்­பியன் கிண்ணம்; 43 ஆண்­டு­க­ளாக கவ­னிக்­கப்­ப­டா­தி­ருந்த தவறு

0 230

பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் மகளிர் ஒற்­றையர் சம்­பி­ய­னுக்கு வழங்­கப்­படும் சம்­பியன் கிண்­ணத்தில் பொறிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் சம்­பி­யன்­களின் பட்­டி­யலில் தவறு இருப்­பது பல வரு­டங்­களின் பின்னர் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

 இவ்­வ­ருடம் பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்­றையர் இறு­திப்­போட்டி கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது.

இப்­போட்­டியில் வெற்­றி­பெற்று அவுஸ்­தி­ரே­லிய வீராங்­கனை ஏஷ்லி பார்ட்டி சம்­பி­ய­னானார்.

1973இல் மார்­கரட் கோர்ட் சம்­பி­யனா­னதன் பின்னர் பிரெஞ்சு பகி­ரங்க போட்­டியில் சம்­பி­ய­னான முதல் பெண் அவுஸ்­தி­ரே­லிய பெண் தானே என எண்­ணினார்.

ஆனால், தனக்கு வழங்­கப்­பட்ட கிண்­ணத்தில் பொறிக்­கப்­பட்­டி­ருந்த முன்னாள் சம்­பி­யன்­களின் பட்­டி­யலில் 1976இல் சம்­பி­ய­னான சூ பார்க்­கரின் பெய­ருக்கு அடுத்து அவுஸ்­தி­ரே­லியர் எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­ததை அவ­தா­னித்த ஏஷ்லி பார்ட்டி, அதிர்ச்சி அடைந்தார்.

உண்­மையில் 1976இல் சம்­பி­ய­னான சூ பார்க்கர் ஒரு பிரித்­தா­னியர் ஆவார். 43 வரு­டங்­க­ளாக இத்­த­வறை எவரும் கவ­னிக்­காமல் இருந்­தமை வியப்­புக்­கு­ரி­யது.

மேற்படி சம்­பியன் கிண்­ணத்தில் இத­னை­விட இன்னும் சில ஆங்­கில எழுத்துப் பிழைகள் இருப்­ப­தையும் காணக்­­கூ­டி­ய­தாக இருந்­த­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்தத் தவறுகளைத் திருத்துவதாக பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் ஏற்பாட்டாளர்கள் கடந்த ஞாயிற் றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!