யுவ்ராஜ் சிங்கை கௌரவிக்கும் வகையில் 12ஆம் இலக்கத்துக்கு விடுகை கொடுக்க வேண்டும்- கெளதம் கம்பிர்

0 271

இந்திய கிரிக்கெட் அணியின் 12ஆம் இலக்க ஜேர்ஸிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) விடுகை கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த மத்திய வரிசை வீரராகத் திகழ்ந்த யுவ்ராஜ் சிங். இடது கை துடுப்பாட்டக்காரரும் சுழற்பந்து வீச்சாளருமாவார். அந்நிய மண்ணில் வேகப்பந்து வீச்சில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் திணறிய போதெல்லாம் யுவ்ராஜ் சிங் அணிக்கு பெரிதும் கைகொடுத்துள்ளார்.

இவர், 2007 உலக இருபதுக்கு 20 போட்டியிலும், 2011 உலகக் கிண்ணப் போட்டியிலும் இந்தியா சம்பியனாவதில் பெரும்பங்காற்றியவர் யுவ்ராஜ் சிங் ஆவார். இவர் 2011 உலகக் கிண்ணத்தில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தினார் யுவ்ராஜ் சிங்.

சில தினங்களுக்கு ஓய்வுபெறுவதாக 12ஆம் இலக்க வீரர் யுவ்ராஜ் சிங் அறிவித்தபோது முன்னாள் மற்றும் சமகால வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்தாலும், இந்திய அணிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து பாராட்டிவருகின்றனர்.

இந் நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர், 12 ஆம் இலக்க ஜேர்சிக்கு பி.சி.சி.ஐ. விடுகை கொடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

10ஆம் இலக்க ஜேர்சியுடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்ற பின்னர் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தக்கூர் 10ஆம் இலக்க ஜேர்ஸியை அணிந்துவிளையாடியிருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனால் பி.சி.சி.ஐ. 10 ஆம் இலக்க ஜேர்ஸிக்கு விடுகை கொடுத்தது.

அதேபோல் யுவுராஜ் சிங்கை கெளரவிக்கும் வகையில் 12ஆம் இலக்க ஜேர்ஸியை யாருக்கும் வழங்காமல் விடுகை கொடுக்க வேண்டும் என கெளதம் கம்பீர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!