திருக்கோவில் உதயசூரியன் அணி சம்பியன்

0 248

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

பாண்­டி­ருப்பு விளை­யாட்டுக் கழகம் ஏற்­பாடு செய்த 2019ஆம் ஆண்­டுக்­கான கிரிக்கெட் சுற்­றுப்­போட்­டியில் திருக்­கோவில் உத­ய­சூ­ரியன் அணி சம்­பியன் பட்­டத்தை சூடி­யது.

இறுதிப் போட்­டியில் கல்­முனை டொல்பிக் கழ­கத்தை 30 ஓட்­டங்­களால் வெற்­றி­கொண்டு உத­ய­சூ­ரி­யன் கழகம் சம்­பி­ய­னா­னது.
32 கழ­கங்கள் பங்­கு­பற்­றிய அணிக்கு எட்டு ஓவர்­களைக் கொண்ட இந்த மென்­பந்து கிரிக்கட் சுற்றுப் போட்­டியின் இறுதிப் போட்டி பாண்­டி­ருப்பு பொது விளை­யாட்டு மைதா­னத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை நடை­பெற்­றது.

இறுதிப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய திருக்­கோவில் உத­ய­சூ­ரியன் விளை­யாட்டுக் கழக அணி எட்டு ஓவர்­களில் ஆறு விக்­கெட்­களை இழந்து 74 ஓட்­டங்­களை பெற்­றது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய கல்­முனை டொல்பின் விளை­யாட்டுக் கழகம் எட்டு ஓவர்­களிலும் சகல விக்­கட்­டு­க­ளையும் இழந்து 44 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்­றது.

கழக தலைவர் என்.சங்கீர்த் தலை­மையில் நடை­பெற்ற பரி­ச­ளிப்­பின்­போது கழ­கத்தின் ஸ்தாபகர் என். குமா­ர­சூ­ரியம் மற்றும் கழக ஆலோசகர் எஸ். தருமலிங்கம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

 

  

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!