ஆமீர் 5 விக்கெட் வீழ்த்தினாலும் பாகிஸ்தானை வென்றது அவுஸ்திரேலியா

0 113

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 46 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இங்கிலாந்தின் டவுண்டன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அவ்வணி 49 ஓவர்களில் 307 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

டேவிட் வோர்ணர் 111 பந்துகளில் 107 ஒரு சிக்ஸர், 11 பவுண்டறிகள் உட்பட ஓட்டங்களைக் குவித்தார். அணித்தலைவர் ஆரோன் பின்ச் 84 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டறிகள் உட்பட 82 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களில் மொஹம்மத் அமீர் சிறப்பாக பந்துவீசி 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். சஹீன் அப்ரிடி 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 266 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

இமாமுல் ஹல் 75 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பெற்றார். அவுஸ்திரேலிய பந்துவீச்சார்களில் பட் கம்மின்ஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!