தூய ஒளி கிண்ண அரை இறுதியில் சென்.மேரிஸ்

0 209

யாழ்ப்­பாணம் கால்­பந்­தாட்ட லீக்கின் அனு­ம­தி­யுடன் பாடும் மீன் கழக அனு­ச­ர­ணை­யுடன் குரு­நகர் சூசை­யப்பர் கழகம் ஏற்­பாடு செய்­துள்ள தூய ஒளி கிண்ண கால்பந்­தாட்ட அரை இறு­தியில் விளை­யா­டு­வ­தற்கு நாவாந்­துறை சென். மேரிஸ் கழகம் தகு­தி­பெற்­றது.

சென். மேரிஸ் அணிக்கும் ஆனைக்­கோட்டை யூனியன் அணிக்கும் இடையில் நடை­பெற்ற இரண்­டா­வது கால் இறுதிப் போட்­டியில் இரண்டு அணி­களும் தலா ஒரு கோல் போட்­டி­ருந்­ததால் போட்டி வெற்­றி­த்தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­தது.

சென். மேரிஸ் அணி சார்­பாக யுனிற்றன் ஒரு கோலையும், யூனியன் அணி சார்­பாக கிரியோன் ஒரு கோலையும் போட்­டனர்.

இதனை அடுத்து வெற்றி அணியைத் தீர்­மா­னிக்கும் பொருட்டு மத்­தி­யஸ்­தரால் பெனல்டி முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இதில் 7 – 8 என்ற பெனல்டி அடிப்­ப­டையில் சென் மேரிஸ் அணி வெற்­றி­பெற்று அரை இறு­திக்கு முன்­னே­றி­யது. மன்­டை­தீவில் படு­கொலை செய்­யப்­பட்ட 31 மீன­வர்­களின் நினைவாக தூயஒளி கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!