மழையினால் பாதிக்கப்படும் எல்லா போட்டிகளுக்கும் மேலதிக நாள் ஒதுக்கப்படுவதில் நடைமுறைச் சிக்கல் – டேவ் றிச்சர்ட்சன்

0 607

உலகக் கிண்ண கிரிக்­கெட்டில் மழை­யினால் பாதிக்­கப்­படும் ஒவ்­வொரு போட்­டிக்கும் மேல­திக நாள் ஒதுக்­கப்­ப­டு­வதும் நடை­முறை சாத்­தி­ய­மல்­ல­வென சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி டேவிட் றிச்­சர்ட்சன் தெரி­வித்தார்.

மழை­கா­ர­ண­மாக மேல­திக நாளை ஒதுக்­கினால் போட்டி விளை­யா­டப்­படும் நாட்கள் நீடிக்­கப்­ப­டு­வ­துடன் நடை­முறைச் சிக்­கல்­களை எதிர்­கொள்ள நேரிடும் என அவர் தனது அறிக்­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.

ஆடு­களம் தயா­ரித்தல், அணியின் மீட்சி, பய­ணிக்கும் நாட்கள், தங்­கு­மிட வச­திகள், மைதான வசதி, போட்டி அதி­கா­ரிகள், தொண்­டர்கள், போட்டி மத்­தி­யஸ்­தர்கள், ஒளி­ப­ரப்பு தள­வா­டங்­களை நகர்த்­துதல், எல்­லா­வற்­றுக்கும் மேலாக மணித்­தி­யாலக்­க­ணக்­காக பய­ணிக்கும் பார்­வை­யா­ளர்கள் ஆகிய அனைத்­தையும் கருத்தில் கொண்டே ஒதுக்­கப்­படும் நாள் நடை­மு­றைக்கு சாத்­தி­யப்­ப­டாது என டேவ் றிச்­சர்ட்சன் தெரி­வித்­துள்ளார்.

அது­மட்­டு­மல்­லாமல் ஒதுக்­கப்­பட்ட நாளில் மழை பெய்­யாது என்­ப­தற்­கான உத்­த­ர­வா­தமும் இல்லை என்­ப­தையும் அவர் சுட்­டிக்­காட்டத் தவ­ற­வில்லை.இதன் கார­ண­மாக 45 லீக் போட்­டிகள் முடிவில் சிறந்த போட்டித் தன்­மையை உறுதி செய்­யும்­வ­கையில் நொக் அவுட் சுற்றில் மாத்­திரம் (அரை இறு­திகள் மற்றும் இறுதிப் போட்டி) மேல­திக நாளை ஒதுக்­கி­யுள்ளோம்.

இது எதிர்­பா­ராத மழைக்­காலம். ஐக்­கிய இராச்­சி­யத்தில் ஜூன் மாதம்தான் மூன்­றா­வது பெரிய வரட்­சி­கா­ல­மாகும். அப்­ப­டி­யி­ருந்தும் கடந்த இரண்டு தினங்­க­ளாக கடும் மழை பெய்­துள்­ளது. 2018இல் ஜூன் மாதம் முழு­வதும் 2 மில்­லி­மீற்றர் மழையே பதி­வா­னது.

ஆனால் இங்­கி­லாந்தின் தென் கீழ் பிர­தே­ச­த்தில் கடந்த 24 மணித்­தி­யா­லங்­களில் (நேற்­று­முன்­தி­னத்­தி­லி­ருந்து) 100 மீல்லி மீற்றர் மழை­பெய்­துள்­ளது.எனவே, மழை­யினால் போட்டி ஒன்று பாதிக்­கப்­பட்டால் அதனைக் குறைந்த ஓவர்­களைக் கொண்ட போட்­டி­யாக நடத்­து­வ­தற்கு போட்டி மத்­தி­யஸ்­தர்­களும் மைதான அலு­வ­ல­கர்­களும் முயற்­சிப்பர். எனவே, முன்­கூட்­டிய தக­வல்­களை சமூ­க­வ­லை­ய­மைப்­புகள் ஊடாக வழங்க நாங்கள் நட­வடிக்கை எடுத்­துள்ளோம் என்றார் டேவ் றிச்சர்ட்சன்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!