தவானுக்கு பதிலாக இந்திய அணியில் ரிஷாப் பாண்ட்! தயார்நிலை வீரராக இங்கிலாந்து செல்கிறார்

0 251

இந்­திய அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர் ஷிக்கர் தவானின் பெரு­வி­ரலில் ஏற்­பட்ட காயத்­தை­ய­டுத்து, இளம் வீர­ரான ரிஷாப் பாண்ட் உலகக் கிண்­ணத்­துக்­கான இந்­திய குழாமில் இணை­ய­வுள்ளார்.

அவுஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ரான உலகக் கிண்ண போட்­டி­யின்­போது மார்க்கஸ் ஸ்டொய்­னிஸின் பந்­து­வீச்சில் தவான் காய­ம­டைந்தார். அவ­ரது பெரு­வி­ரலில் முறிவு ஏற்­பட்­டுள்­ளதால், 10 அல்­லது 12 நாட்கள் விளை­யாட மாட்டார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தவா­னுக்கு பதி­லாக ரிஷாப் பாண்ட்டை இணைக்க வேண்டும் என இந்­திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், இங்­கி­லாந்து அணியின் முன்னாள் தலைவர் கெவின் பீற்­றர்சன் ஆகியோர் கருத்து தெரி­வித்­தி­ருந்­தனர்.

இதே­வேளை, தவானின் இடத்துக்கு அம்­பாட்டி ராயு­டுவை இணைக்­க­வேண்டும் என முன்னாள் வீரர் கௌதம் கம்­பீரும் கூறி­யுள்ளார்.இந்­நி­லையில் மன்­செஸ்டர் நக­ரி­லுள்ள இந்­திய குழா­முடன் ரிஷாப் பாண்ட் இணை­ய­வுள்ளார் என இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை நேற்று உறு­திப்­ப­டுத்­தி­யது.

எனினும், அவர் ஒரு தயார்­நிலை வீர­ரா­கவே அனுப்­பப்­பட்­டுள்ளார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. உலகக் கிண்ணத் தொட­ரி­லி­ருந்து தவான் வில­கி­விட்­ட­தாக கரு­தாமல் அவரின் நிலைமையை கண்காணித்து வருவதென இந்திய அணி நிர்வாகம் நேற்றுமுன்தினம் தீர்மானித்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!