வரலாற்றில் இன்று ஜூன் 13: 2000 வட கொரிய – தென் கொரிய முதல் உச்சி மாநாடு நடைபெற்றது

0 125

1525: ரோமன் கத்தோலிக்க மதகுருக்களுக்கான விதிகளை மீறி, கத்ரினா வொன் போரா எனும் பெண்ணை மார்ட்டின் லூதர் திருமணம் செய்தார்.

1625: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், பிரெஞ்சு இளவரசி ஹென்ரிட்டா மரியாவை திருமணம் செய்தார்.

1893: அமெரிக்க ஜனாதிபதி குறோவர் கிளீவ்லேண்ட்டின் தாடையிலிருந்து புற்றுநோய் கட்டியொன்று இரகசிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் இறந்து 9 வருடங்களின் பின்னர் 1917 ஆண்டே இவ்விடயம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

1917: முதலாம் உலக யுத்தத்தின்போது லண்டனில் ஜேர்மன் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சினால் 162 பேர் உயிரிழந்தனர்.

1934: ஜேர்மன் சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லரும் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முஸோலினியும் இத்தாலியின் வெனிஸ் நகரில் சந்தித்தனர்.

1952: பால்டிக் கடலின் மேல் பறந்துகொண்டிருந்த, சுவீடனின் இராணுவ விமானமொன்றை சோவியத் யூனியன் சுட்டு வீழ்த்தியது.

1955: சோவியத் யூனியனின் முதலாவது இரத்தினக்கல் சுரங்கமான மீர் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

1977: அமெரிக்க கறுப்பினத்தவர்களின் சமவுரிமைக்காக பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை கொலை செய்த ஜேம்ஸ் ஏர்ல் ரோய் சிறையிலிருந்து தப்பிச் சென்று 3 நாட்களின்பின் மீண்டும் கைதானார்.

1978: லெபனானிலிருந்து இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெற்றன.

1982: சவூதி அரேபியாவில் மன்னர் காலித் காலமானதையடுத்து அவரின் சகோதரர் பஹ்த் புதிய மன்னரானார்.

1997: இந்தியாவின் புது டில்லி நகரில் திரையரங்கு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் 59 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

2000: வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல், தென்கொரிய ஜனாதிபதி கிம் டாயே ஜுங் ஆகியோர் வட கொரியாவில் சந்தித்துப் பேசினார். இவ்விரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான முதலாவது உச்சிமாநாடு இதுவாகும்.

2000: பாப்பரசர் 2ஆம் அருளப்பர் சின்னப்பரை 1981 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்ட மெஹ்மெட் அலியை இத்தாலிய அரசாங்கம் மன்னிப்பளித்து விடுதலை செய்தது.

2002: தென் கொரியாவில் அமெரிக்க இராணுவ வாகனமொன்றில் சிக்கி 14 வயதான ஒரு சிறுமி பலியானதால் அமெரிக்காவுக்கு எதிராக தென்கொரியாவில் பல மாதகாலமாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

2005: 13 வயதான கெவின் அர்விஸோ எனும் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கிலிருந்து பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜக் ஷன் விடுதலை செய்யப்பட்டார்.

2007: ஈராக்கின் அல் அஸ்காரி பள்ளிவாசல் மீது இரண்டாவது தடவையாக குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.

2010: இட்டோகவா எனும் எரிகல் பாகங்களைக் கொண்ட ஜப்பானிய விண்கலமான ஹயபுஸா பூமிக்குத் திரும்பியது.

2012: ஈராக்கின் பல நகரங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 93 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 300 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!