ரஜினி எப்படிப்பட்ட மாமனார் -தனுஷ்

0 286

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படிப்பட்ட மாமனார் என்பதை தெரிவித்துள்ளார் தனுஷ். தனுஷ் நடித்துள்ள முதல் ஹொலிவூட் படமான ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ வரும் 21 ஆம் திகதி இந்தியாவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் தனுஷ். முன்னதாக மும்பையில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தனுஷுடன் அவரின் மனைவி ஐஸ்வர்யா கலந்து கொண்டார். இந்நிலையில் தனுஷ் தனது படம், மாமனார் ரஜினிகாந்த், குடும்பம் பற்றி பேட்டிகளில் பேசி வருகிறார்.

தனுஷுக்கு மாமா ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை.

அது தொடர்பாக அவர் ஏற்க­னவே எடுத்த முயற்சிகள் கை கொடுக்கவில்லை.

இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும், தனது ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்­கையில் உள்ளார் அவர்.

இந்நிலையில் அவர் ரஜினியை புகழ்ந்து பேட்டி அளித்துள்ளார்.

ரஜினி சார் மாதிரி சான்ஸே இல்லை. அவர் போன்று யாராலும் நடிக்கவே முடியாது.

பிற குடும்பங்களில் மாம­னாரும், மருமகனும் எப்படி பேசிக் கொள்வார்களோ அது போன்று தான் நானும், அவரும் பேசுவோம்.

என்ன நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருப்பதால் சில நேரம் வேலை தொடர்பாகவும் பேசிக் கொள்வோம் என்கிறார் தனுஷ்.

என் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் எனக்கு நண்பர்கள் போன்றவர்கள்.

பல நாட்கள் கழித்து என்னை பார்க்கும்போது அவர்கள் குஷியாகிவிடுவார்கள். அவர்களுடன் இருக்கும் நேரத்தில் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வேன், அவர்களுடன் விளையாடுவேன். நான் ஊரில் இருந்தால் என்னுடன் நேரம் செலவிட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.

பிற குடும்பங்களை போன்று தான் எங்களின் அப்பா, மகன் உறவும்.என் மகன்களுடன் சேர்ந்து நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த புகைப்படங்களை பார்க்கும்போது எல்லாம் என் மகன்கள் வளரும் பருவத்தை மிஸ் பண்ணக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன் என்று தனுஷ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!