கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல்!

0 329

                                                                                                                               (ப.அகிந்தன், மயூரன்)
கொக்குவில் ரயில் நிலையப் பொறுப்பதிகாரி மீது இனந்தெரியாத குழுவினர் நடத்திய தாக்குதல்  படுகாயமடைந்த  அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கொக்குவில் சந்திக்கு அண்மையில் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

கொக்குவில் சந்திக்கு அண்மையாக உள்ள முச்சக்கர வண்டி திருத்தும் நிலையம் ஒன்றுக்கு அருகில் ரயில் நிலையப் பொறுப்பதிகாரி நின்றுள்ளார். அதன்போது , அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் அவரைத் தாக்கியுள்ளனர். . இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், இந்தத் தாக்குதல் சம்பம் தெடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, சம்பவத்தை அடுத்து கொக்குவில் சந்தியை அண்மித்த பகுதியில் இராணுவத்தினரும், பொலிஸாரும் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!