கிரீஸ் நாட்டில் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

0 151

நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால், இருவரும் தங்களை காதலர்கள் என இதுவரை சொல்லிக் கொண்டதே இல்லை.

அடிக்கடி வெளிநாடு­களுக்குப் பறக்கும் இந்த ஜோடி தற்போது கிரீஸ் நாட்டில் சுற்றுப் பயணத்தில் உள்ளது.

‘தர்பார், விஜய் 63’ ஆகிய படங்களில் தொடர் படப்பிடிப்பிலிருந்த நயன்தாரா அவற்றிலிருந்து கொஞ்சம் விலகி ஓய்வெடுக்க விரும்பி­னாராம்.

காதல் ஜோடி இந்த முறை தேர்ந்தெடுத்த நாடு கிரீஸ்.

இதற்காக சில தினங்களுக்கு முன்பு அவர்கள் அங்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வழக்கம் போல விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

வழக்கம் போல ரசிகர்கள் அதற்கு அவர்களது கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு புகைப்படத்தில் கமெண்ட்டுகளை பிளாக் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இருவரது வீட்டிலும் அவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டாலும் நயன்தாராவிற்கு தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டேயிருப்பதால் இப்போதைக்கு இருவரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்றே தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!