கம்பளையில் பாடசாலை ஒன்றின் மீது மரம் வீழ்ந்து 2 மாணவிகள், ஒரு ஆசிரியை காயம்!

0 634

கம்பளை புனித ஜோசப் மகளிர் கல்லூரி வகுப்பறை மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு மாணவிகளும் ஆசிரியை ஒருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இன்று (13) பகல் வீசிய பலத்த காற்றினால் மேற்படி பாடசாலையின் வகுப்பறை ஒன்றுக்கு அருகிலிருந்த மரம் திடீரென முறிந்து வகுப்பறை மீது வீழ்ந்ததில் வகுப்பறைக்குச் சேதம் ஏற்பட்டதுடன் மாணவிகளில் இருவரும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து கம்பளை கல்வி வலய அதிகாரிகளும் பொலிஸாரும் ஸ்தலத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராயந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!