ஓமான் வளைகுடாவில் 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்; 44 பேர் மீட்பு

Two oil tankers struck in suspected attacks in Gulf of Oman

0 1,891

ஓமான் வளைகுடாவில் இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரு கப்பல்களிலும் இருந்த 44 பணியாளர்கள் ஈரானினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அருகில் நான்கு எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற ஒரு மாத இடைவெளியில் இன்றைய சம்பவம் பதிவாகியுள்ளது.

மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்கள் ஈரானிய துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!