வரலாற்றில் இன்று ஜுன் 14: 2017 – லண்டனில் கட்டடம் தீப்பற்றியதால் 72 பேர் பலி

0 417

1276: மொங்கோலிய ஆக்கிரமிப்புப் படையினரிடமிருந்து தப்புவதற்காக நாட்டிலிருந்து வெளியேறிய சீனாவின் சோங் வம்ச அரச குடும்பத்தினர் 8 வயதான ஸாயோ ஷீயை மன்னராக்கி முடிசூடினர்.

1645: பிரித்தானிய மன்னருக்கு ஆதரவான 12,000 பேர் கொண்ட படையை நாடாளுமன்றத்துக்கு ஆதரவான 15,000 பேர் கொண்ட படை தோற்கடித்தது.

1777: நட்சத்திரங்களும் கோடுகளும் கொண்ட கொடி அமெரிக்க தேசிய கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

1800: நெப்போலியனின் படைகள் இத்தாலியை மீண்டும் கைப்பற்றின.

1807: நெப்போலியனின் படைகள் போலந்தில் ரஷ்ய படைகளை தோற்கடித்தன.

1830: அல்ஜீரியா மீது படையெடுத்த 34,000 பிரெஞ்சு துருப்பினர் அல்ஜீரியாவில் தரையிறங்க ஆரம்பித்தனர்.

1846: மெக்ஸிகோ வசமிருந்த கலிபோர்னியாவின் சோனோமா நகரில் மெக்ஸிகோ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டு கலிபோர்னியா குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் அப்பகுதியை அமெரிக்கா கைப்பற்றியது.

1872: கனடாவில் தொழிற்சங்கங்கள் சட்டபூர்வமானதாக்கப்பட்டன.

1900: ஹவாய் தீவு அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாக்கப்பட்டது.

1907: நோர்வேயில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

1940: பிரான்ஸின் தலைநகர் பாரிஸை ஜேர்மன் படைகள் கைப்பற்றின.

1940: சோவியத் யூனியன் விதித்த நிபந்தனைகள், காலக்கெடுவினால் லித்துவேனியா சுதந்திரத்தை இழந்தது.

1949: 2 ஆம் அல்பேர்ட் எனும் பெயருடைய குரங்கொன்று அமெரிக்காவினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. விண்வெளிக்கு சென்ற முதல் குரங்கு இது.

1959: டொமினிக்கன் குடியரசில் ரபாயெல் ட்ருஜிலோவில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக கியூபாவிலிருந்து டொமினிக்கன் குழுவொன்று புறப்பட்டது. இக்குழுவில் நால்வரைத் தவிர ஏனையோர் கொல்லப்பட்டனர்.

1962: ஐரோப்பிய விண்வெளி முகவரகம் ஸ்தாபிக்கப்பட்டது.

1967: சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டை பரிசோதித்தது.

1985: கிறீஸின் ஏதென்ஸ் நகரிலிருந்து புறப்பட்ட விமானமொன்று ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டது.

1994: கனடாவின் வன்கூவர் கரில் நடைபெற்ற ஹொக்கி போட்டியொன்றின் பின் ஏற்பட்ட வன்முறைகளையடுத்து 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

2002: பூமியிலிருந்து 121,000 கிலோமீற்றர் தூரத்தில் விண்கல்லொன்று கடந்து சென்றது. இது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.

2014: யுக்ரைனில் அந்நாட்டு விமானப்படை விமானமொன்று சுட்டுவீழ்த்தப்பட்டதால் 49 பேர் உயிரிழந்தனர்.

2017: லண்டன் நகரில் 24 மாடிகளைக் கொண்ட கிறன்பெல் டவர் எனும் குடியிருப்புக் கட்டடம் தீக்கிரையானதால் 72 பேர் உயிரிழந்தனர்.

2017: வட மாகாண அமைச்சர்களான தி. குருகுலராஜா மற்றும் பி.ஐங்கரநேசன் ஆகியோர் தங்களது இராஜினாமா கடிதங்களை ஒப்படைக்க வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் மாகாண சபையில் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!