அம்பாறை மாவட்ட வைத்தியர் தலவாக்கலையில் கைது!

0 1,725

                                                             (பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

லிந்துளை நகரசபையின் அனுமதி பெறாது சுமார் இரண்டு வருடங்களாக தலவாக்கலை நகரில் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் ஒருவர் தலவாக்கலை பொலிஸாரினால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் சில பெண்களுக்கு கருக்கலைப்புச் செய்ததாகவும் இந்த விடயத்தை குறித்த மருத்துவமனையில் தொழில் புரிந்த வந்த தாதியர் ஒருவர் தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர்
அசோக்க சேபாலவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த வைத்தியசாலைக்கு சென்ற தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் மற்றும் பொலிஸார் வைத்தியசாலைக்குச் சென்று சோதனையிட்டு சில காரணங்களின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர்.

இதேவேளை, குறித்த மருத்துவமனையிலிருந்து பெருந்தொகையான மருந்துகளும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
குறித்த டாக்டர்  அம்பாறைப் பிரதேசத்தைச சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரான வைத்தியரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலையில்
ஆஜர் டுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!