ஆவா குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்

Northern Governor Dr Suren Ragavan ready for talks with ‘Awa Group’

0 255

ஆவா குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தயார் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கூறியுள்ளார். எந்தவொரு இடத்திலும் பாதுகாப்பு எதுவுமின்றி சென்று பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அவர் கூறியுள்ளார்.

கொக்குவில் ரயில் நிலைய அதிபர், வடக்கில் வன்முறைகளில் ஈடுபடும் ஆவா குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுவோரால் தாக்கப்பட்ட நிலையில் ஆளுநர் சுரேன் ராகவன் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் எந்தவொரு சமூகத்துக்கும் எதிரான ஜனநாயக விரோ செயல்கiளை தான் அனுமதிக்கப் போவதில்லை என ஆளுநர் அலுவலகத்தினால் விடுவிக்கப்பட்ட அறிக்கையொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவNது சிறந்த வழி எனவும், எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தான் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!