ஆஸி துடுப்புத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக சச்சின் வழக்கு

Sachin Tendulkar Sues Australian Cricket Bat Maker Over Two Million Dollars

0 385

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலியாவிலுள்ள கிரிக்கெட் துடுப்புத் தயாரிப்பு நிறுவனமொன்றிடம் 20 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.

சிட்னியைத் தளமாகக் கொண்ட, ஸ்பார்ட்டன் ஸ்பேர்ட்ஸ் இன்டர்நெஷனல் எனும் இந்நிறுவனம் தயாரிக்கும் ‘சச்சின் பை ஸ்பார்ட்டன்’ எனும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஆடைகளுக்கு தனது படத்தையும் இலச்சினையையும் பயன்படுத்துவதற்காக 10 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் வழங்குவதற்கு 2016 ஆம் ஆண்டு இணக்கம் தெரிவித்திருந்ததாக தனது மனுவில் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்நிறுவனத்தின் பொருட்களை ஊக்குவிக்கும் பணிகளில் தான் ஈடுபட்டதாகவும், லண்டன், மும்பை முதலான இடங்களில் நடந்த ஊக்குவிப்பு நிகழ்வுகளில் தான் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், 2018 செப்டெம்பர் வiயிலும், தனக்குரிய பணம் எதையும் இந்நிறுவனம் வழங்கவில்லை எனவும் நீதிமன்றில் தாக்கல் செய்பபட்ட மனுவில் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்த வேண்டாம் என தான் கோரியபோதிலும், ஸ்பார்ட்டன் நிறுவனம் தொடர்ந்தும் தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தியதாக சச்சின் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு 20 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை (சுமார் 24 கோடி இலங்கை ரூபா,  9.6 கோடி இந்திய ரூபா) வழங்குமாறு ஸ்பார்ட்டன் நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு சச்சின் டெண்டுல்கர் கோரியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!