‘எங்களுக்கு தெரியாமல் வைத்தியர் ஷாபியால் சிசேரியன் செய்ய முடியாது’! – 69 தாதியர்கள் வாக்குமூலம்

0 921

                                                                                                                                       (எம்.எப்.எம்.பஸீர்)
சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின்போது வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை  அல்லது பெளோபியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம் ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் – சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி. க்கு வாக்கு மூலமளித்துள்ளனர்.

சிசேரியன் சிகிச்சைகளின் போது அங்கிருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல்  இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள்  சுட்டிக்கடடியுள்ளனர்.

சட்ட விரோத கருத்தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக குற்றம் சுமத்தபப்டும் நிலையில், அவர் தற்போது சி.ஐ.டியில் தடுத்து வைத்து விசாரிக்கப்ப்ட்டு வருகின்றார்.

இந்நிலையில், வைத்தியர் ஷாபியுடன் சத்திர சிகிச்சைகளின்போது சத்திர சிகிச்சை கூடங்களில் இருந்தவர்கள் என சி.ஐ.டி.யினர் 70 சத்திர சிகிச்சைக்  கூட  தாதியர்களை அடையாளம் கண்டனர். அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுகயீனம் காரணமாக சிகிச்சைப் பெறும் நிலையில் ஏனைய 69 பேரிடமும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.

இதன்போதே அந்த 69 பேரும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சிசெரியன் சிகிச்சைகளின் இடையே அவ்வாறு சட்ட விரோத கருத்தடை நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தாம் ஒரு போதும் அவதானிக்கவில்லை எனவும், தமக்குத் தெரியாமல் அவரால்  களவில் அதனை செய்ய முடியாது எனவும் வாக்கு மூலமளித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!