மருதமுனை, காத்தான்குடி, வெல்லம்பிட்டி, அநுராதபுரத்தைச் சேர்ந்த ஐவரும் நான்காம் மாடியில் தடுப்பு

0 2,286

                                                                                                                                           (எம்.எப்.எம்.பஸீர்)
உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் சவூதி அரேபியாவுக்கு சென்ற சிறப்பு சி.ஐ.டி. குழுவினரால் ஐவர் கைது செய்யப்பட்டு இன்று (14) காலை இலங்கைக்கு அழைத்த வரப்பட்டிருந்தனர்.

30 வயதான புதிய காத்தான்குடியைச் சேர்ந்த ஹயாத்து மொஹம்மட் அஹமட் மில்ஹான், 34 வயதான மருதமுனையைச் சேர்ந்த மொஹம்மட் மர்சூக் மொஹம்மட் ரிழா, வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 47 வயதான மொஹம்மட் முஹிதீன் மொஹம்மட் சன்வார் சப்ரி, 29 வயதான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் இல்ஹாம்,  அநுராதபுரம் கெப்பித்திகொல்லாவைச் சேர்ந்த 37 வயதான அபுசாலி அபூபக்கர் ஆகிய ஐந்து பயங்கரவாத சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டு இன்று (14) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களாவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மேலும், சவூதியிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் ஒருவரான மில்ஹான் எனும் பிரதான சந்தேக நபர், தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவுக்கு உம்ராவுக்காக சென்றிருந்தார். தொடர் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற தினத்தன்று அவர் மீள இலங்கைக்கு திரும்பவிருந்த நிலையிலும் அவர் மீளத் திரும்பவில்லை. அவரின் தலைமையிலேயே இரண்டாம் கட்டத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையாளர்கள் சந்தேக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஸஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!