3 விடயங்கள் தொடர்பில் ஹிஸ்புல்லாஹ்விடம் வாக்குமூலம்!

0 592

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (15) சமூகமளித்துள்ளார்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு பாசிக்குடாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சவூதிப் பிரஜைகளைச் சந்தித்தமை மற்றும் 100 முஸ்லிம்களுக்கு ஆயுதங்களைத் தான் பெற்றுக் கொடுத்ததாக இந்தியாவில் ஊடகங்களுக்கு தெரிவித்தமை உட்பட 3 விடயங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே ஹிஸ்புல்லாஹ் இது தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குச் சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி:

சிறந்த ஆத்மிகவாதியாக காணப்பட்ட ஸஹ்ரான் ஹாஷிம் பயங்கரவாதியாக மாறுவார் என நான் நினைக்கவில்லை; நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் ஹிஸ்புல்லாஹ் வாக்குமூலம் (விபரம்)

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!