‘ஒரு தந்தையின் யாத்திரை’ குறுந்திரைப்படம்
பெற்றோரை சுமையாகக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்ப்பது காலாசாரமாக மாறிக் கொண்டிருக்கின்ற நிலையில், பிள்ளைகளால் முதியோர் இல்லத்தில் தனித்து விடப்பட்ட ஒரு தந்தையின் அனுபவத்தை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு உன்னத படைப்பாகவே ‘ ஒரு தந்தையின் யாத்திரை” என்ற குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
குறுந்திரைப்பட இயக்குனர் எம்.வாசுதேவனின் தாயாரித்து , இயக்கியுள்ள இக் குறுந்திரைப்படத்திற்கு வீ. செந்தூரன் இசையமைத்துள்ளார். தனேந்திரன் சுரேஷ் பாண்டியராஜன் இதனை தொகுத்துள்ளதோடு, சஞ்சீவன் மாயா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதுமையின் தேவையை தாயின் பேரன்பை எடுத்துரைக்கும் இவ்வுலகம் அந்த தாய்மைக்கு பின்னால் இருக்கும் தந்தையின் தியாகத்தை மறந்து விடுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) சர்வதேச தந்தையர் தினத்தன்று இக்குறுந்திரைப்படம் வெளியிடப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.
இதனை தயாரித்து இயக்கியுள்ள எம்.வாசுதேவனின் முக்கிய கதாபாத்திரத்திலும் , விக்னேஷ், ஜெனீபர் மயூரி , பேபி மயூரி ஆகியோரும் நடிப்பிலும் உருவாகியுள்ள இக்குறுந்திரைப்படம் ஏசையமநளயசi.டம இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது.