காணமால் போன மாணவி சடலமாக மீட்பு!

0 200

                                                                                                                                     (ரெ.கிறிஷண்காந்)
இரண்டு நாட்கள் காணாமல் போயிருந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று (16)  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை, லொக்கல்ஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள புதரில் சிக்கியிருந்த நிலையில்  குறித்த மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதுளை, மெதபதன இசுறு உயன வீதியில் வசித்துவந்த லக்ஷிகா மதுவந்தி பெர்னாண்டோ என்ற 19 வயதான மாணவியே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாக மாணவியின் பெற்றோர் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில். லொக்கல்ஓயா நீர்த்தேக்கத்துக்கு அருகிலிருந்து, குறித்த மாணவியினது என சந்தேகிக்கப்படும் உடைமைகள் சிலவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். இதனையடுத்தே சடலம் மீட்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!