கூட்டாகப் பதவி விலகியமை சர்வதேசத்திலும் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளது! -குமார வெல்கம

0 201

                                                                                                                     (இராஜதுரை ஹஷான்)
கூட்டாக பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகள் மீண்டும் தமது அமைச்சு பொறுப்புக்களை பெற்றுக் கொள்வது சிறப்பானதாகும். கூட்டாக பதவி விலகியமை சர்வதேச மட்டத்திலும் தவறான நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளன. ஒரு சிலரின் தவறான செயற்பாடுகளை கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது முற்றிலும் தவறானதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்களை ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் ஒரு அரசியல் பிரசாரமாகவே பயன்படுத்திக் கொண்டது. பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசியல்வாதிகளும் பொறுப்பற்ற விதமாக கருத்துக்களைக் குறிப்பிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
அரசியல்வாதிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு ஆரம்பத்திலே ஒரு விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கியிருக்க வேண்டும். அரசியல் தேவைகளுக்காக எல்லை மீறி செயற்பட்டுள்ளமையினால் சாதாரண மக்கள் இன்று பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

முன்னாள் அமைச்சர் ரிஷhத் பதியுதீனுக்கு எதிராக எதிர் தரப்பிணரால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. இந்தப் பிரேரணையில் உள்ளடக்கியுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களின் உண்மை தன்மையை அவர் அவர் தரப்பில் இருந்து தெளிவுப்படுத்தி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க் கொண்டிருக்க வேண்டும். இவரும் இவ்விடயத்தில் முறையாக செயற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!