வரலாற்றில் இன்று: ஜூன் 17- 2017 போர்த்துகல் காட்டுத் தீயினால் 64 பேர் பலி

0 183

1579: அமெ­ரிக்­காவின் நோவா அல்­பியன் பிராந்­தியம் (தற்­போ­தைய கலி­போர்­னியா) இங்­கி­லாந்­துக்குச் சொந்­த­மா­ன­தென சேர் பிரான்சிஸ் ட்ரெக் அறி­வித்தார்.

1631: முக­லாய மன்னன் ஷாஜ­கானின் மனைவி மும்தாஜ் மஹால் குழந்தை பிர­ச­வத்­தின்­போது இறந்தார். அதன்பின் 17 ஆண்­டு­களில் தாஜ் மஹாலை ஷாஜகான் கட்­டி­ முடித்தார்.

1843: நியூஸிலாந்தின் மோரி பழங்­குடி இனத்­த­வர்­க­ளுக்கும் பிரித்­தா­னிய குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கும் இடையில் முத­லா­வது பாரிய ஆயுத மோதல் இடம்­பெற்­றது.

1939: பிரான்ஸில் கொலைக்­குற்­ற­வா­ளி­யான இயூஜின் வீல்ட்மன் என்­பவர் கில்­லட்டின் எனும் இயந்­தி­ரத்தில் தலை துண்­டிக்­கப்­பட்டு கொல்­லப்­பட்டார். பிரான்ஸில் தலை­துண்­டிக்­கப்­பட்டு மரண தண்­ட­னைக்­குள்­ளான கடைசி நபர் இவ­ராவார்.

1940: எஸ்­டோ­னியா, லத்­வியா, லித்­து­வே­னியா நாடுகள் சோவியத் யூனியனின் ஆதிக்­கத்­துக்குள் உள்­ள­டக்­கப்­பட்­டன.

1944: டென்­மார்க்­கி­ட­மி­ருந்து பிரி­வ­தாக ஐஸ்­லாந்து சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.
1848: அமெ­ரிக்­காவில் இடம் பெற்ற விமான விபத்தில் 43 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1953: கிழக்கு ஜேர்­ம­னியில் தொழி­லா­ளர்­களின் கிளர்ச்­சியை அடக்­கு­வ­தற்காக சோவியத் யூனியன் இரா­ணு­வத்தை அனுப்­பி­யது.

1963: வியட்­நாமில் மதச் சுதந்­திரம் தொடர்­பாக பாரிய வன்­மு­றைகள் மூண்­டன.

1967: தனது முத­லா­வது வெப்ப அணு­வா­யு­தத்தை வெற்­றி­க­ர­மாக பரி­சோ­தித்­தாக சீனா அறி­வித்­தது.

1971: போதைப் பொருட்­க­ளுக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் “யுத்­தத்தை” ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக் ஷன் பிர­க­ட­னப்­ப­டுத்­தினார்.

1972: அமெ­ரிக்க ஜன­நா­யகக் கட்­சியின் தேசிய அலு­வ­ல­கத்­துக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக கரு­வி­களை பொருத்த குடி­ய­ர­சுக்­கட்­சி­யினர் மேற்­கொண்ட நட­வ­டிக்கை தொடர்­பாக வெள்ளை மாளிகை ஊழி­யர்கள் ஐவர் கைது செய்­யப்­பட்­டனர்.

1991: தென் ஆபி­ரிக்க மக்­களை பிறப்­பின்­போது இன ரீதி­யாக வகைப்­ப­டுத்தி குறிப்­பிட வேண்டும் என்ற சட்டம் ரத்­துச்­செய்­யப்­பட்­டது.

1992: ஆயுதக் குறைப்பு தொடர்­பான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் புஷ், ரஷ்ய ஜனா­தி­பதி பொரிஸ் யெல்ட்சின் ஆகியோர் கையெ­ழுத்­திட்­டனர்.

1994: மனை­வி­யையும் அவரின் காத­ல­ரையும் கொலை செய்த குற்­றச்­சாட்­டுக்­குள்­ளான அமெ­ரிக்க கால்­பந்­தாட்ட வீரர் ஓ.ஜே. சிம்­ஸனை நீண்ட தூரம் துரத்­திச்­சென்று பொலிஸார் கைது செய்­தனர்.

2015: அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள தேவாலயமொன்றில் நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் 9 பேர் உயிரிழந்தனர்.

2017: போர்த்துகலில் பாரிய காட்டுத் தீ பரவியது. இதனால் 64 பேர் உயிரிழந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!