UEFA முன்னாள் தலைவர் மைக்கல் பிளாட்டினி ஊழல் விசாரணையில் கைது

Former UEFA president Michel Platini arrested in 2022 World Cup probe

0 429

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற கால்பந்தாட்ட நட்சத்திரமுமான மைக்கல் பிளாட்டினி பிரெஞ்சு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு உலக கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியை நடத்தும் அனுமதியை கத்தாருக்கு வழங்கியமை தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு உலக கிண்ண சுற்றுப்போட்டியை நடத்துவதற்கான வாக்குகளை பணம் கொடுத்து வாங்கியதாக கத்தார் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தலைவராக மைக்கல் பிளாட்டினி தெரிவுசெய்யப்பட்டார்.

பலோன் டிஓர் விருதை 3 தடவைகள் வென்ற மைக்கல் பிளாட்டினி, 2016 ஆம் ஆண்டு பீபா தலைவராக தெரிவுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவர் 4 வருடகாலம் கால்பந்தாட்டத்துறையில் ஈடுபடுவதற்கு 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பீபா முன்னாள் தலைவர் ஸெப் பிளாட்டரிடமிருந்து 20 இலட்சம் சுவிஸ் பிராங்குகளைப் பெற்றமை உட்பட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்குத் இத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரெஞ்சு பொலிஸாரால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!