5  நாட்களாக நடக்க முடியாமல் இருந்த காட்டு யானை  சிகிச்சைக்குப் பின்  காட்டுக்குள் அனுப்பப்பட்டது!

0 127

வவுனியா பாலமோட்டைப் பகுதியில் கடந்த ஐந்து தினங்களாக காலில் காயமடைந்த யானை ஒன்று நடந்து செல்லாத முடியாத நிலையில் காணப்பட்டது. இது தொடர்பில   கிராம மக்கள்  பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையினால் நேற்று காலை கால்நடை வைத்தியரினால் காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு காட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும்  வனஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும்   யானைக்கு அருகில் சென்று யானையின் நிலைமைகளை அவதானித்தபோது யானையின் காலில் காயம்  காணப்பட்டுள்ளது. இதையடுத்து   வடபிராந்திய வனஜீவாரிகள் திணைகளத்தின் கால்நடை வைத்திய அதிகாரி பா. கிரிதரன் அப்பகுதிக்குச் சென்று காட்டு யானைக்கு சிகிச்சையளித்தார்.

யானை கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில் மிகவும் சிரமத்துக்கு  மத்தியில் இரண்டு மணித்தியாலயமாக மேற்கொண்ட   சிகிச்சையின் பின்னர்   மேற்படி யானை காட்டுக்கு அனுப் பிவைக்கப்பட்டுள்ளது.   

           

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!