15 வயது மாணவனுடன் பாடசாலைக்குள் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு சிறைத்தண்டனை

0 346

பாட­சா­லைக்குள் வைத்து, 15 வய­தான மாணவன் ஒரு­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட ஆசி­ரியை ஒரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதி­மன்­ற­மொன்று சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

46 வய­தான ஜெனிபர் பிரெசெட் என்­ப­வ­ருக்கே இத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.இவர் கெனக்­டிகட் மாநி­லத்தின் பாட­சா­லை­யொன்றில் நாடக ஆசி­ரி­யை­யாக பணி­யாற்­றி­யவர்.அப்­பா­ட­சா­லையில் நாட­கங்­களில் நடிக்கும் மாண­வர்கள் ஆடை­மாற்றும் அறையில் வைத்து 15 வயது மாண­வ­னுடன் ஆசி­ரியை ஜெனிபர் பிரெசெட் பாலியல் உறவில் ஈடு­பட்டார் என குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இவர்கள் இரு­வரும் ஆடை­மாற்றும் அறையில் இருப்­பதை பாட­சா­லையின் பாது­காப்பு உத்­தி­யோத்­தர்கள் கண்­ட­வுடன், மேற்­படி மாணவன், அந்த அறை­யி­லி­ருந்து வெளியே ஓடிச் சென்­ற­தாக கூறப்­பட்­டது.அந்த அறையில் தலை­ய­ணைகள், மெத்தை உறை சகிதம் அவ­சர படுக்கை ஒன்று அமைக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆசி­ரியை ஜெனிபர், எதுவும் நடக்­க­வில்லை என பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளிடம் கூறினார். ஆனால், அங்கு ஆணு­றைகள் உட்­பட சந்­தே­கத்­துக்­கி­ட­மான பல பொருட்­கள் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.2017 ஜன­வரி 5 ஆம் திகதி இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்தால் தான் உள­வியல் ரீதி­யிலும் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­தாக மேற்­படி மாணவன் பின்னர் தெரி­வித்தான்.

இது தொடர்­பான வழக்கு விசா­ர­ணையில் ஆசி­ரியை ஜெனிபர் குற்­ற­வாளி என நீதி­மன்றம் கடந்த வாரம் தீர்ப்­ப­ளித்­தது. அவருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் 10 வருடகாலம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!