YouTube பிரபலங்களுக்கு பல்கலைக்கழக அனுமதி; இந்தோனேஷிய பல்கலைக்கழகத்தின் விசேட திட்டம்

0 2,176

இந்­தோ­னே­ஷி­யா­வி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­க­மொன்று, மாண­வர்­களின் அனு­ம­திக்­காக புதிய முறை­யொன்றை பின்­பற்ற ஆரம்­பித்­துள்­ளது. யூரியூப் (you tube) இணை­யத்­த­ளத்தில் பிர­ப­ல­மாக விளங்­கு­ப­வர்­க­ளுக்கு பல்­க­லைக்­க­ழக அனு­மதி வழங்­கப்­படும் என ‘தேசிய அபி­வி­ருத்தி பல்­க­லைக்­க­ழகம் வெட்­டரன் ஜகார்த்தா’ எனும் இந்­தோ­னே­ஷிய பல்­க­லைக்­க­ழகம் தெரி­வித்­துள்­ளது.

இத்­திட்­டத்தின் கீழ், யூரியூப் இணை­யத்­த­ளத்தில் குறைந்­த­பட்சம் 10,000 சந்­தா­தா­ரர்­களைக் கொண்ட சனலின் உரி­மை­யாளர் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­கலாம். ஆனால், அந்த சனல்கள் ஊடாக யூரி­யூப்பில் பதி­வேற்­றப்­பட்ட வீடி­யோக்கள் அச­லா­ன­வை­யாக இருக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் ஒரு லட்சம் தட­வைகள் பார்க்­கப்­பட்­ட­வை­யாக இருக்க வேண்டும் எனவும் நிபந்­த­னைகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

மேற்­படி தகு­தி­களைக் கொண்­ட­வர்கள், பல்­க­லைக்­க­ழத்தால் மேலும் சோத­னை­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டுவர். அவர்கள் 4 முதல் 5 நிமிட நேரம் கொண்ட புதிய வீடி­யோவை உரு­வாக்கிக் காட்­டு­மாறு கோரப்­ப­டுவர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.இந்­தோ­னே­ஷி­யாவில் 26 கோடி மக்கள் உள்­ளனர். உலகில் அதிக சனத் தொகை கொண்ட நாடு­களின் பட்­டி­யலில் இந்­தோ­னே­ஷியா 4 ஆவது இடத்தில் உள்­ளது.

பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்கு தகுதி பெறு­வ­தற்கு இந்­தோ­னே­ஷி­யாவில் பலத்த போட்டி நில­வு­கி­றது.இதே­வேளை, சமூக வலைத்­த­ளங்­களும் அங்கு அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இங்கு மக்கள் சராசரியாக நாளொன்றுக்கு 3 மணித்தியாலங்கள் இணையத்தில் செலவிடுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஏ.எவ்.பி. தெரிவிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo