ஜனாதிபதியின் ஆட்சேபனையை மீறி சாட்சியமளித்த அதிகாரிகள்; சாட்சியமளிக்க மறுப்போருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பிரதி சபாநாயகர் எச்சரிக்கை

0 161

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் தொடர்­பாக விசா­ரிக்கும் நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் தற்­போது சேவை­யி­லுள்ள அரச அதி­கா­ரிகள் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு அழைக்­கப்­படக் கூடாது என ஜனா­தி­பதி அறி­வு­றுத்­தி­யி­ருந்த போதிலும், பொலிஸ் அதி­கா­ரிகள் இருவர் நேற்று சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

இத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில், பாது­காப்பு மற்றும் புல­னாய்வு அதி­கா­ரிகள் சாட்­சி­ய­ம­ளிக்க அழைக்­கப்­ப­டு­வது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தலாம் என ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார்.இந்­நி­லையில், காத்­தான்­குடி பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி மற்றும் தற்­போ­தைய பொறுப்­ப­தி­காரி ஆகியோர் நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நேற்று சாட்­சி­ய­ம­ளித்­தனர்.

நாடா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்குத் தலைமை தாங்­கிய பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி, விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கையில், இத்­தெ­ரி­வுக்­கு­ழு­வுடன் ஒத்­து­ழைக்க மறுப்­ப­வர்­க­ளுக்கு 10 வரு­ட­காலம் வரை­யான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­டலாம் என எச்­ச­ரித்தார்.

‘எவ­ரேனும் ஆஜ­ராக மறுத்தால் அல்­லது ஆதா­ரங்­களை மறைத்தால், அவர்கள் நாடா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மையை மீறு­ப­வர்­க­ளாவர்.அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­டலாம்’ என அவர் கூறினார் என ஏ.எவ்.பி தெரி­வித்­துள்­ளது.இத்­தெ­ரி­வுக்­குழு விசா­ர­ணையை நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பு­வதை அரச தொலைக்காட்சி இரு வாரங்களுக்கு முன் நிறுத்திய போதிலும், நாடாளுமன்ற இணையத்தளம், மற்றும் தனியார் அலைவரிசைகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!