ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் கூட்டுப்படைத் தளபதி நியமனம்

0 93

ஸ்ரீலங்கா கிரிக்­கெட்டின் புதிய தலைமைப் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக முன்னாள் விமா­னப்­படை தலைமை அதி­காரி ரொஷான் குண­தி­லக்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளிலும் நடை­பெறும் சக­ல­வி­த­மான சர்­வ­தேச கிரிக்கெட் சுற்றுப் பய­ணங்­களின் பாது­காப்பு விட­யங்­களில் ரொஷான் குண­தி­லக்­கவின் பிர­தான பங்­க­ளிப்பு இடம்­பெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜூன் 17ஆம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் பத­வி­யேற்­றுள்ள அவர், ஸ்ரீலங்கா கிரிக்­கெட்டின் பாது­காப்பு திட்­டங்­களின் தந்­தி­ரோ­பாய ஆய்­வு­க­ளுக்கும் பொறுப்­பாக இருப்பார்.

ஹெலி­கொப்டர் ஓட்­டி­யாக 1978இல் நியி­மிக்­கப்­பட்ட ரொஷான், பின்னர் ஏயார் சீவ் மார்­ஷ­லாக தர­மு­யர்த்­தப்­பட்­ட­துடன் விமா­னப்­ப­டையின் கட்­டளைத் தள­ப­தி­யா­கவும் பதவி வகித்தார்.

அத்­துடன் கூட்­டுப்­ப­டை­களின் தள­ப­தி­யா­கவும் பதவி வகித்த அவர் 35 வரு­டங்­க­ளுக்கு மேல் பாது­காப்புப் படைப் பிரிவில் சேவை­யாற்­றி­யுள்ளார்.‘‘எமது கிரிக்கெட் கால அட்­ட­வ­ணையை தங்­கு­த­டை­யின்றி கொண்டு நடத்­து­வ­தற்கு தேவை­யான பாது­காப்பை மேலும் பலப்­ப­டுத்த அவ­ரது வருகை பெரிதும் உதவும் என நம்­பு­கின்றேன்’’ என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் ஷம்மி சில்வா தெரி­வித்தார்.

‘‘எந்­த­வகை­யான கிரிக்­கெட்டை எடுத்­துக்­கொண்­டாலும் பாது­காப்­புக்கே முன்­னு­ரிமை வழங்கப்படும். பாதுகாப்பு உறுதியாக இருக்கும்போது ஒரு சிறந்த சூழலில் வீரர்கள் சுதந்திரமாக விளையாடக்கூடியதாக இருக்கும்’’ என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!