வரலாற்றில் இன்று ஜூன் 19: 1961 குவைத் சுதந்திரப் பிரகடனம் செய்தது

0 130

1269: பிரான்ஸில் மஞ்சள் அடை­யாளச் சின்­ன­மின்றி பொது இடங்­களில் காணப்­படும் யூதர்கள் அனை­வ­ருக்கும் அப­ராதம் விதிக்­கு­மாறு பிரெஞ்சு மன்னன் 9 ஆம் லூயினால் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

1846: ஒழுங்­க­மைக்­கப்­பட்ட முத­லா­வது கூடைப்­பந்­தாட்டப் போட்டி அமெ­ரிக்­காவின் நியூஜேர்ஸி மாநி­லத்தில் நடை­பெற்­றது.

1850: சுவீடன்-, நோர்வே முடிக்­கு­ரிய இள­வ­ரசி கார்லை நெதர்­லாந்து இள­வ­ரசர் லூயிஸ் திரு­மணம் செய்தார்.

1862: அமெ­ரிக்க நாடா­ளு­மன்றம் அடி­மை­மு­றையை தடை­செய்­தது.

1867: மெக்­ஸிகோ மன்­ன­ராக 3 வரு­டங்கள் பதவி வகித்த ஆஸ்­தி­ரி­யாவைச் சேர்ந்த முதலாம் மெக்­ஸி­மி­லியன் குடி­ய­ரசுப் படை­யி­னரால் கைது­செய்­யப்­பட்டு சுட்­டுக்­கொல்­லப்­பட்டார்.

1875: ஒட்­டோமன் சாம்­ராஜ்­யத்­துக்கு எதி­ராக ஹேர்­ச­கோ­வி­னி­யாவில் கிளர்ச்சி ஏற்­பட்­டது.

1910: தந்­தையர் தினம் முதல் தட­வை­யாக அமெ­ரிக்­காவின் வாஷிங்டன் நகரில் கொண்­டா­டப்­பட்­டது.

1961: பிரிட்­டனின் ஆட்­சி­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தாக குவைத் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது.

1966: மும்­பையில் சிவ­சேனா அமைப்பு ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1990: ஆதி­வா­சி­களை பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சட்­டத்தை நோர்வே அங்­கீ­க­ரித்­தது.

1991: ஹங்­கேரி மீதான சோவியத் யூனியனின் ஆக்­கி­ர­மிப்பு முடி­வுற்­றது.

2007: ஈராக்கின் பாக்தாத் நக­ரி­லுள்ள அல் கிலானி பள்­ளி­வாசல் மீது நடத்­தப்­பட்ட குண்­டுத்­தாக்­கு­தலில் 78 பேர் உயி­ரிழந்­த­துடன் 218 பேர் காய­ம­டைந்­தனர்.

2009: சீனாவில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொலி­ஸா­ருக்கும் பொது மக்­க­ளுக்கும் இடையில் வன்­முறை மூண்­டது.

2009: பாகிஸ்­தானின் வட­மேற்கு பிராந்­தி­யத்தில் தலிபான் மற்றும் ஏனைய கிளர்ச்சி அமைப்­பு­க­ளுக்கு எதி­ராக படை நடவடிக்கையை பாகிஸ்தான் இராணுவம் ஆரம்பித்தது.

2012: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ், லண்;டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் அரசியல் புகலிடம் கோரினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!