நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 23
“கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்
(சென்றவாரத் தொடர்ச்சி)
நான் புறப்படுறேன். புள்ளையெ பார்த்துக்கிட்டு நீயும் கவனமா இரு ! நான் புறப்புடுறேன். என்ற சுரேஷ் ப்ரீப் கேஷை தூக்கிக் கொண்டு வெளியேறினான்.அவன் போவதையே பார்ர்த்துக் கொண்டிருந்த சுகந்தி விம்மினாள்.
மாடியில் நித்திரை கலைந்து குழந்தை வீரிட்டு அழுதது.
இனி அதிலிருந்து..
மகேஸ்வரன் அன்றைய தினசரியைப் படித்துக் கொண்டிருக்கிறார். வெளியே காரொன்று வந்து நிற்கும் ஒலி கேட்கிறது. கார்க் கதவு திறந்து மூடும் ஒலியும் கேட்கிறது. வராந்தாவில் கோலிங் பெல் ஒலிக்கிறது. அது கேட்டு யெஸ் கமிங் ! என்றார் மகேஸ்வரன்.
கதவைத் திறந்து கொண்டு குட் ஆவ்டர் நூன் சேர் ! என்றவாறே சுரேஷ் வீட்டினுள் நுழைந்தான்.மகேஸ்வரன் உள் நோக்கி நிவேதா ! சுரேஷ் கேம் என குரல் கொடுத்தார்.

ஓ..கே..டெடி என்றவாறே பயணம் போவதற்கான ஆயத்தமுடன் கையில் ஒரு சிறு சூட்கேசுடன் உள்ளே இருந்து வராந்தாவுக்கு வந்த நிவேதா, சுரேஷைப் பார்த்து ஐ ஏம் ரெடி சேர் ! என்றாள். பின் தந்தையைப் பார்த்து டெடி ! டின்னருக்கும் சேர்த்து ரெடி பண்ணி வச்சிருக்கேன்மெனேஜ் பண்ணிக் கொள்ளுங்க டெடி நாளைக்கு இதே நேரம் ஐ எம் ஹியர் ! சுகந்தியோட பேபிய டெடிக்கு காட்டணும்.
இருங்க நான் போய் பேபியெ எடுத்துக் கிட்டு வர்ரேன் என்ற வாறே காரை நோக்கிச் சென்றாள்.
நிவேதா ! சுகந்தி வெடிங்குக்கு வரல்ல!
ஏன் சேர்? வியப்புடன் கேட்டாள்.
சுரேஷ் தயங்கிய வாறே அவளுக்கு கொஞ்சம் சுகமில்ல! என்றான்.
அப்போ நானும் வரல்ல சேர் ! என பின் வாங்கினாள், நிவேதா.
ஏன் நிவேதா ?…
சுகந்தி இல்லாம நான் மட்டும் சுரேஷ் கலவரப்பட்டான்.
பரவாயில்லம்மா ! புறப்பட்டதே புறப்பட்டுட்ட நீ சுரேசோட போயிட்டு வாம்மா என்றார், மகேஸ்வரன்.
இல்ல டெடி எனத் தயங்கினாள், நிவேதா.
உனக்கென்னம்மா சுரேஷ் அந்நியமானவரா? கெரி ஒன் மை சைல்ட் ! என நிவேதாவை ஊக்கப்படுத்தினார், மகேஸ்வரன்.
செய்வதறியாது நிவேதா தரையைப் பார்த்தபடி நின்றாள்.
இப்போ புறப்பட்டா ஈவினிங் அஞ்சு மணிக்கெல்லாம் நுவரெலியாவுக்கு போயிடலாம் இல்லையா? என சுரேஷைப்பார்த்துக் கேட்டார், மகேஸ்வரன்.
ஓ யெஸ் என்றான், சுரேஷ்.
இனியென்னம்மா யோசிக்கிற புறப்படம்மா! என்றார், மகேஸ்வரன்.
தந்தையின் எதிர வந்து நின்ற நிவேதா தந்தையை முழந்தாளிட்டு வணங்கி நான் போகட்டுமா அப்பா? என விடை கேட்டாள்.
கோட் பிளஸ் சைல்ட் என, மகேஸ்வரன், மகளுக்கு விடை கொடுத்தார்.
நிவேதா சிந்தனையுடன் சூட்கேஷைத் தூக்கிக் கொண்டு வெளியே உள்ள சுரேஷின் காரை நோக்கி நடந்தாள்.
மகேஸ்வரன் மீண்டும் பத்திரிகை படிப்பதில் ஆழ்ந்தார். சுரேஷின் கார் புறப்பட்டுப் போகும் ஒலி அவர் செவிகளில் விழ வில்லை. சுரேஷ் காரைச் செலுத்த, பின் சீட்டில் அமர்ந்து இருந்த நிவேதா உங்களை நம்பாத அளவுக்கு சுகந்திக்கு என்னாச்சு ? எனக் கேட்டாள்.
நீ என்னோட தொழில் பார்க்கிறது தான் எனறான் சுருக்கமாக.
அப்படி ஒரு சந்தேகம் சுகந்தியோட மனசுல இருக்கிற நேரம் நாங்க ரெண்டு பேரும் இப்படி ஒரு தூரப் பயணம் போகிறது நல்லதில்லையே சேர். என்னைக் கொண்டு போய் வீட்டுல விட்டுடுங்க சேர்? என்றாள், கலக்கமுடன்.
இந்த வெடிங்குக்கு நாங்க போயே ஆகணும் நிவேதா!
நான் உங்களோட இப்படி ஒரு பயணம் போனது சுகந்திக்கு தெரிய வந்தா எரிகிற நெருப்பில எண்ணெய் ஊத்தின மாதிரி ஆகும் சேர். பிளீஸ் என்னைக்கொண்டு போய் வீட்டுல விட்டுடுங்க சேர் என புலி வாயில் அகப்பட்ட மான் குட்டியாகக் கலங்கினாள், நிவேதா.
அப்படி ஒன்னும் வராது நிவேதா. நீ குழம்பாம இரு என்றான், சுரேஷ்.
தன் குழந்தைக்கு என் பெயரையே வைக்கிற அளவுக்கு என் மேல உயிரையே வச்சிருந்த சுகந்தி ! பாவம் அவமனதுல நானே முள்ளாயிட்டேன். இனிமே நான் உங்க கிட்ட பிரக்டீஸ் பண்ண வரல்ல சேர் என அழுதாள்.
காரை நிறுத்திய சுரேஷ் அது ஏன் நிவேதா என பின்னால் திரு ம்பிப் பார்த்துக் கேட்டான்.
ஏன் சேர் காரை நிறுத்திட்டீங்க!
ஏன் இனிமே பிரக்டீஸ் பண்ண வர மாட்டன்னு சொன்ன…!
சுகந்தி ரொம்ப நல்லவ கணவன் மனைவின்னா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு குடும்பம்ங்கிற வேலிக்குள்ள வாழணும் சேர்!
மீண்டும் காரைச் செலுத்து ஆரம்பித்த சுரேஷ் நிவேதா ! நீ என்னோட இருக்கிறதால தான் நான் நிம்மதியா இருக்கிறேன்இல்லேன்னா.. சுகந்தி எனக்கு தர்ர ட்ரபிளுக்கு அவளைக் கொண்ணுடுவோமான்னு கூட எனக்கு சில நேரம் தோணும் என்றான், மனப் புழுக்கமாக.
வாட் ! இெதன்ன பைத்தியக்கார நெனைப்பு ! அப்படி செஞ்சுட்டா நீங்க மட்டும் சந்தோசமா வாழ்ந்திட முடியுமா சேர்? சம்டைம்ஸ் அப்படி ஏதும் நடந்தா நானே உங்களுக்கு எதிரா வாதிடுவேன் என்றாள், கடு மையாக நிவேதா.
சுரேஸ் சற்றுத் தூரம் மௌனியாக காரைச் செலுத்தினான்.
(அடுத்த வாரம் தொடரும்)