கேன்ஸ் திரைப்பட விழாவில் அணிந்த ஆடைக்காக வியட்நாமில் அபராதத்தை எதிர்கொள்ளும் மொடல்!

0 717

வியட்நாமிய மொடல் ஒருவர் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அணிந்த ஆடை காரணமாக வியட்நாமிய அரசாங்கத்தினால் அபராதம் விதிக்கப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.

72 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கடந்த மாதம் பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் வியட்நாமைச் சேர்ந்த பிரபல மொடல்களில் ஒருவரும் நடிகையும் பெஷன் வடிவமைப்பாளருமான என்கொக் த்ரின்ஹ் பங்குபற்றினார்.
கடந்த  19 ஆம் திகதி கேன்ஸ் செங்கம்பள வரவேற்பில் பங்குபற்றிய த்ரின்ஹ் அணிந்திருந்த ஆடை ஆபாசமானது என வியட்நாமில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என வியட்நாமிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமின் கலாசார, விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் என்குயென் என்கோக் தியென் இதுதொடர்பாக வியட்நாம் நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றுகையில், ‘மொடல் த்ரின்ஹை கேன்ஸ்  திரைப்பட விழாவுக்கு எமது அமைச்சு அனுப்பவில்லை. அவர் அணிந்திருந்த ஆடை முறையற்றது. அது பொதுமக்களின் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் என்குயென் என்கோக் தியென்

அதிகாரிகளின் விசாரணையில் த்ரின்ஹ் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், தான் அணிந்திருந்த ஆடையை பலர் பாராட்டினர் என மொடலும் நடிகையுமான என்கொக் த்ரின்ஹ் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!