வரலாற்றில் இன்று ஜூன் 20 : 1991 ஜேர்மனியின் தலைநகர் பேர்லினுக்கு மாற்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது

0 153

1605: ரஷ்­யாவில் 3 மாதங்கள் மாத்­திரம் ஆட்­சி­யி­லி­ருந்த சார் மன்­ன­ரான 16 வய­தான 2 ஆம் பியோடர் படு­கொலை செய்­யப்­பட்டார்.

1819: எஸ்.எஸ். சவன்னா எனும் நீராவிக் கப்பல் அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து புறப்­பட்டு இங்­கி­லாந்தை அடைந்­தது. அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தைக் கடந்த முத­லா­வது நீராவிக் கப்பல் இது­வாகும்.

1837: பிரிட்­டனில் விக்­டோ­ரியா அரசி ஆட்­சிக்கு வந்தார்.

1877: உலகின் முத­லா­வது வர்த்­தக தொலை­பேசி சேவை கன­டாவின் ஹமில்டன் நகரில் அலெக்­ஸாண்டர் கிரஹம் பெல் ஆரம்­பித்தார்.

1877: இந்­தி­யாவின் மிக பர­ப­ரப்­பான ரயில் நிலை­ய­மான விக்­டோ­ரியா ரயில் நிலையம் மும்­பையில் திறக்­கப்­பட்­டது.

1895: உலகின் மிக பர­ப­ரப்­பான செயற்கை நீர்­வழி பாதை­யான கீல் கால்வாய் ஜேர்­ம­னியில் உத்­தி­யோ­கபூர்வமாக திறக்­கப்­பட்­டது.

1919: பியூர்ட்டோ ரிக்­கோவில் ஏற்­பட்ட தீவி­பத்தில் 150 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1940: பிரான்ஸ் மீது இத்­தாலி படை­யெ­டுத்­தது. இப்­ப­டை­யெ­டுப்பு தோல்­வியில் முடிந்­தது.

1944: பின்­லாந்து நிபந்­த­னை­யற்ற வகையில் சர­ண­டைய வேண்­டு­மென சோவியத் யூனியன் வலி­யு­றுத்­தி­யது.

1945: ஹிட்­லரின் ஆட்­சிக்­கா­லத்தில் ஜேர்­ம­னியின் ரொக்கெட் நிர்­மா­ணத்­துக்கு முக்­கிய பங்­காற்­றிய விஞ்­ஞா­னி­யான வார்ன்ஹர் வொன் பிரவுண் மற்றும் அவரின் குழு­வி­னரை அமெ­ரிக்­கா­வுக்கு இட­மாற்­று­வ­தற்கு அமெ­ரிக்க ராஜாங்க செயலர் அங்­கீ­காரம் வழங்­கினார். பின்னர் அமெ­ரிக்க ரொக்கெட் தொழில்­நுட்ப அபி­வி­ருத்­திக்கு இவர்கள் பெரும் பங்­காற்­றினர்.

1959: கன­டாவில் ஏற்­பட்ட சூறா­வ­ளி­யினால் 59 பேர் உயி­ரி­ழந்­தனர்.

1959: பிரான்­ஸி­ட­மி­ருந்து மாலி கூட்­ட­மைப்பு சுதந்­திரம் பெற்­றது.

1963: கியூபா ஏவு­கணை விவ­கார சர்ச்­சை­யை அடுத்து, அமெ­ரிக்க, சோவியத் யூனியன் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான அவ­சர உரை­யா­ட­லுக்­காக “சிவப்பு தொலை­பேசி” எனும் விசேட தொலை­பேசி இணைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

1982: பிரிட்­ட­னு­ட­னான போக்­லாந்து யுத்­தத்தில் ஆர்­ஜன்­டீ­னாவின் கடைசி இரா­ணுவத் தளம் சர­ண­டைந்­தது.

1991: கிழக்கு, மேற்கு ஜேர்­ம­னிகள் மீள இணைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, ஜேர்­ம­னியின் தலை­ந­கரை பொன் நக­ரி­லி­ருந்து மீண்டும் பேர்­லி­னுக்கு மாற்றுவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் அங்கீகாரமளித்தது.

1994: ஈரானில் ஷியா முஸ்லிம் வணக்கஸ்தலம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 25 பேர் பலியானதுடன், சுமார் 70 பேர் காயமடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!