வரலாற்றில் இன்று ஜூன் 21 : 2004 தனியார் விண்வெளி ஓடம் முதல் தடவையாக விண்வெளியை அடைந்தது

0 280

1529: இத்­தா­லியின் வட பகு­தி­யி­லி­ருந்து பிரெஞ்சுப் படை­களை ஸ்பானிய படைகள் வெளி­யேற்­றின.

1791: பிரெஞ்சுப் புரட்­சி­யின்­போது, மன்னன் 16 ஆம் லூயியும் அவரின் குடும்­பத்­தி­னரும் பாரிஸ் நக­ரி­லி­ருந்து தப்பிச் செல்ல ஆரம்­பித்­தனர்.

1824: கிறீஸ் சுதந்­திரப் போரின்­போது ஏஜின் கடலின்

1898: குவாம் தீவை ஸ்பெய்­னி­ட­மி­ருந்து அமெ­ரிக்கா கைப்­பற்­றி­யது.

1900: அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ராக சீனா உத்­தி­யோ­கபூர்வமாக போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1930: பிரான்ஸில் இரா­ணு­வத்­துக்­கான ஒரு வருட கட்­டாய ஆட்­சேர்ப்பு அமுல்­ப­டுத்­தப்­பட்­டது.

1942: அமெ­ரிக்­காவின் ஓரிகன் மாநில கரை­யோ­ரத்­துக்கு அருகில் தோன்­றிய ஜப்­பா­னிய நீர்­மூழ்­கிகள் 17 ஷெல்­களை ஏவின. அமெ­ரிக்க பிர­தான நிலப்­ப­ரப்பில் ஜப்­பா­னிய படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு சில தாக்­கு­தல்­களில் இதுவும் ஒன்­றாகும்.

1948: நீண்­ட­நேரம் இயங்­கக்­கூ­டிய ஒலிப்­ப­திவுத் தட்­டுக்­களை கொலம்­பியா ரெக்கோர்ட்ஸ் நிறு­வனம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

1970: அமெ­ரிக்­காவின் ரயில் பாதை நிர்­மாண நிறு­வ­ன­மான “பென் சென்ட்ரல்” நிறு­வனம் வங்­கு­ரோத்­தா­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது. அமெ­ரிக்க வர­லாற்றில் வங்­கு­ரோத்­தான மிகப்­பெ­ரிய நிறு­வனம் இது­வாகும்.

1957: கன­டாவின் முதல் பெண் அமைச்­ச­ரவை அமைச்­ச­ராக எலன் பெயர்­குளோவ் பத­வி­யேற்றார்.

1982: அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரொனால்ட் றீகனை படு­கொலை செய்ய முயன்­ற­தாக குற்றம் சுமத்­தப்­பட்ட ஜோன் ஹின்க்லே மன­நிலை பாதிப்­புக்­குள்­ளா­ன­வ­ரென்­பதால் விடு­த­லை­யானார்.

2004: விண்­வெ­ளிக்குச் சென்ற முதல் தனியார் விண்­வெளி ஓடம் என்ற பெரு­மையை ஸ்பேஸ்ஷிப் வன் விண்­வெளி ஓடம் அடைந்­தது.

2006: புளுட்­டோவின் புதி­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சந்­தி­ரன்­க­ளுக்கு நிக்ஸ், ஹைட்ரா எனப் பெய­ரி­டப்­பட்­டது.

2012: இந்­தோ­னே­ஷி­யாவின் ஜாவா தீவுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யாவின் கிறிஸ்மஸ் தீவுக்கும் இடையில் 200 பேருடன் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த படகு கவிழ்ந்­ததால் 17 பேர் உயிரிழந்தனர் 70 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.

2016: அநுராதபுரம், எப்பாவெலயில் அரசுக்குச் சொந்தமான லங்கா பொசுப்பேற் நிறுவன கட்டடத்தில் பாரிய தீ ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!