நீதியே! நீ கேள்!! (தொடர்கதை) அத்தியாயம் – 24

0 233

“கலாபூஷணம்” பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன்

(சென்றவாரத் தொடர்ச்சி)
வாட் ! இெ­தன்ன பைத்­தி­யக்­கார நெனைப்பு ! அப்­படி செஞ்­சுட்டா நீங்க மட்டும் சந்­தோ­சமா வாழ்ந்­திட முடி­யுமா சேர் ? சம்டைம்ஸ் அப்­படி ஏதும் நடந்தா நானே உங்­க­ளுக்கு எதிரா வாதி­டுவேன் என்றாள், கடு­மை­யாக, நிவேதா.
சுரேஸ் சற்றுத் தூரம் மௌனி­யாக காரைச் செலுத்­தினான்.

இனி அதி­லி­ருந்து…

ற்றுத் தூரம் மௌனி­யாக காரைச் செலுத்­திய சுரேஷ் நிவேதா ! நான் சுகந்­தியெ டிவோஸ் பண்ண முடிவு பண்­ணிட்டேன் என்றான்.

இது கேட்டு அதிர்ச்சி அடைந்த நிவேதா வாட் ? என்ன இது, இந்த சின்ன விஷ­யத்­துக்­கா­கவா ! எனக் கேட்டாள். சுரேஷ், நிவே­தா­வுக்கு மிக அமை­தி­யாகப் பதில் சொல்ல ஆரம்­பித்தான்.. யெஸ் ! நிவேதா ! அவள டிவோஸ் பண்­ணிட்டு என்­ற­வாறே மேற்கொண்டு பேசாமல் தலைக்கு மேலுள்ள வியு கிளாஸ் மூலம் பின் சீட்­டி­லுள்ள நிவே­தாவைப் பார்த்தான்.

வெளிநாட்­டுக்கு ஏதும் போகப் போறீங்­களா.. இல்ர நிவேதா, நான் உங்­கள மெரி பண்ண முடிவு பண்­ணிட்டேன், என்றான் சுரேஷ் சம்­மட்­டியால் அடித்­தது போல். திடுக்­கிட்டு வெறுப்­புடன் சே மை குட்னஸ் ! என தனது அதி­ருப்­தியைக் காட்­டினாள்.

சுரேஷ் தொடர்ந்தான் யெஸ் நிவேதா ! நான் அந்த முடி­வுக்கு வந்­துட்டேன். இது சம்­பந்­தமா நானே உங்க டெடி­யோட பேசுறேன்..!
தட் ஈஸ் டூ லேட் சேர் ! என்றாள் நிவேதா காழ்ப்பு உணர்ச்­சி­யுடன்.

சோ வை ?
மிஸ்டர் சத்­தி­யன என் டெடி எனக்கு டிசைட் பண்­ணிட்டார்! என சுரே­ஷுக்கு பதி­லடி கொடுத்தூள், நிவேதா.
ஓ.எனக் கல­வரப் பட்டான், சுரேஷ்

அவன் தடு­மாற்­றத்தை உணர்ந்த நிவேதா சேர் ! ரோட்டப் பார்த்து வண்­டியெ கவ­னமா ஓட்­டுங்க சேர் என்றாள்.

”…………………..” பேச நா எழாமல் வண்­டியைச் செலுத்­தினான், சுரேஷ்.

நிவேதா தொடர்ந்தாள்.. சேர் ! நீங்க ஒரு பெமிலி மேன்­நீங்க சுகந்­திக்கும் குழந்­தைக்கும் அநி­யாயம் செய்ய நெனைக்­கா­தீங்க. அது பாவம்! அவளைப் போல ஒரு வைப் உங்­க­ளுக்கு ஏழேழு ஜென்­மத்­துக்கும் கெடைக்க மாட்டா.

உன் டெடி இது விஷ­யமா சத்­தி­ய­னோட பேசி முடிவு பண்­ணிட்­டாரா நிவேதா எனக் கேட்டான் சுரேஷ் டெடி என் விருப்­பத்த இன்­னைக்கு காலை­யிலத் தான் கேட்டார். நான் முடிவு சொல்­லிட்டேன். இந்த வெடிங் முடிஞ்சு திரும்­பி­னதும் டெடி சத்­தி­யனைச் சந்­திச்சுப் பேசுவார்

சுரேஷ் மனக் குழப்­பத்­துடன் பய­ணத்தைத் தொடர்ந்தான். திரு­மண வீடு கோலா­க­ல­மாகக் கொண்­டாடப்பட்­டது.
மேல் நாட்டு மது­பான வகை­களும் மேல் நாட்டு நட­னங்­களும் தாரா­ளமாக இடம் பெற்­றி­ருந்­தன.

ஒரு சிலரைத் தவிர பெரும்­பா­லான ஆண், பெண் விருந்­தி­னர்கள் மது அரு­ந­து­வ­திலும் நட­ன­த்­திலும் ஈடு­பட்­டனர். நிவேதா மது அருந்த வில்லை என்­றாலும் தனது வருங்­காலக் கணவன் என்ற பூரிப்பில் சத்­தி­ய­னுடன் நீண்ட நேரம் நடன மாடு­வதில் ஈடு­பட்டாள்.

மண­மக்கள் விருந்­தி­னர்­­க­ளுடன் அள­வ­ளாவிக் கொண்­டி­ருந்­தனர். ஒரு­வரை ஒருவர் தழு­வி­ய­வாறு நட­ன­மாடிக் கொண்­டி­ருந்த சத்­தி­ய­னி­டமும் நிவே­தா­வி­டமும் வந்த சுரேஷ், நிவே­தாவை தன்­னுடன் நட­ன­மாட வரும் படி அழைத்தான்.

சுரேஷின் அழைப்பை மறுத்த நிவேதா, சத்­தி­யனை இன்னும் இறுகத் தழு­விய வாறு நட­னத்தைத் தொடர்ந்தாள். சுரேஷ் முகத்தைக் கடு­மை­யாக வைத்துக் கொண்டு பல வந்­த­மாக நிவே­தாவை இழுத்­தெ­டுத்தான். 

இதனை ஒரு சிலர் காணவே நிவேதா சத்­தி­ய­னுக்குக் கண்ணைக் காட்டி விட்டு சுரே­ஷுடன் போய் உணர்­வற்ற நிலையில் நடனம் என்ற பெயரில் அசைந்­தா­டினாள்.

சத்­தி­யனை இன்­னொரு பெண் வந்து நட­ன­மாட அழைக்­கவே, அந்த அழைப்பை மறுத்து எதிரே வந்த பரி­மா­று­ப­வ­னிடம் ஒரு பழ­ரச போத்­தலை வாங்கிக் கொண்டு அந்த இடத்­தி­லி­ருந்து நகர்ந்தான்.

சுரேஷ், நிவேதாவை ஆட்டுவித்துக் கொண்டிருந்தான். சுரேஷின் செவிகளில் மிஸ்டர் சத்தியன என் டெடி எனக்கு டிசைட் பண்ணிட்டார் ! என காரில் வரும் போது நிவேதா கூறிய வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருந்தன.

                                                                                                                                                                                        (அடுத்த வாரம் தொடரும்)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!