வரலாற்றில் இன்று ஜூன் 24: 2018 சவூதி அரே­பி­யாவில் வாகனம் செலுத்த பெண்கள் முதல் தட­வை­யாக அனு­ம­திக்­கப்­பட்­ட­னர்

0 272

1314: ஸ்கொட்­லாந்துப் படைகள் இரண்டாம் எட்­வேர்ட் தலை­மை­யி­லான இங்­கி­லாந்துப் படை­யி­னரைத் தோற்­க­டித்­த­ன. ஸ்கொட்­லாந்து தனது விடு­த­லையை மீண்டும் பெற்­றது.

1509: எட்டாம் ஹென்றி இங்­கி­லாந்தின் மன்­ன­னாக முடி சூடினார்.

1571: பிலிப்­பைன்ஸின் மணிலா நகரம் அமைக்­கப்­பட்­டது.

1597: டச்சு கிழக்­கிந்­தியக் கம்­ப­னியின் முத­லா­வது தொகு­தி­யி­னர் ஜாவாவின் பாண்டாம் நகரை அடைந்­த­னர்.

1664: அமெ­ரிக்­காவின் நியூ ஜேர்சியில் குடி­யேற்றம் ஆரம்­ப­மா­னது.

1812 : ரஷ்­யா­வினுள் ஊடுருவும் முயற்­சியில் நெப்­போ­லி­யனின் படைகள் நேமன் ஆற்றைக் கடந்­த­ன.

1846: பிரான்ஸில் அடோல்ப் சாக்ஸ் என்­ப­வர் சாக்­ஸபோன் இசைக்­க­ரு­விக்கு காப்­பு­ரிமை பெற்­றார்.

1849: அமெ­ரிக்கப் பெண்­ம­ணி­யான எலி­ஸபெத் பிளாக்வெல் என்­ப­வரே அமெ­ரிக்­காவில் முதன் முத­லாக மருத்­துவப் பட்டம் பெற்ற பெண்­ம­ணி­யா­வார்.

1859: சார்டீனிய இராச்­சியம் மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்­போ­லி­யனின் படைகள் வடக்கு இத்­தா­லியில் ஆஸ்­தி­ரியப் படை­களைத் தோற்­க­டித்­தன.

1860: புளோரன்ஸ் நைட்­டிங்­கேலின் எண்­ணக்­க­ருக்­க­ளுக்­க­மைய முத­லா­வது தாதிகள் பயிற்சி நிலையம் இங்­கி­லாந்தில் அமைக்­கப்­பட்­டது.

1894: பிரெஞ்சு ஜனாதிபதி மரீ பிராங்­சுவா சாடி கார்னோ படு­கொலை செய்­யப்­பட்­டார்.

1932: சியாமில் (தாய்­லாந்து) இடம்­பெற்ற இரா­ணுவப் புரட்­சியை அடுத்து மன்­னரின் அதி­கா­ரங்கள் வெகு­வாகக் குறைந்­தன.

1938: 450 மெட்ரிக் தொன் எடை­யுள்ள விண்கல் அமெ­ரிக்­காவின் பென்­சில்­வே­னியா மாநில சிக்­கோரா நகரில் வீழ்ந்­தது.

1940: பிரான்ஸும் இத்­தா­லியும் சமா­தான ஒப்­பந்­தத்தை ஏற்­ப­டுத்­தின.

1945: இரண்டாம் உலகப் போர்: நாஸி ஜேர்மனி­யரை வெற்றி கொண்ட சோவியத் படை­களின் வெற்றி அணி­வ­குப்பு மொஸ்­கோவில் இடம்­பெற்­றது.

1948: சோவியத் ஒன்­றியம் ஜெர்மனியின் தமது கட்­டுப்­பாட்­டி­லுள்ள பேர்லினின் மேற்குப் பகு­தி­யுடன் அமெ­ரிக்க, பிரித்­தா­னிய, பிரெஞ்­சுக்கள் வசம் இருந்த பகு­தி­க­ளு­ட­னான தரை­வழித் தொடர்புகளைத் துண்­டித்­தது.

1956: மெக்­ஸி­கோவில் சே குவேரா, ஃபிடல் கெஸ்ட்ரோ உட்­பட 26 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். குடி­வ­ரவு சட்­டத்தை மீறி­யமை, வெளி­நாட்டு அர­சுக்கு எதி­ராக சதி செய்­தமை முத­லான குற்­றச்­சாட்­டுகள் இவர்கள் மீது சுமத்­தப்­பட்­டன.

1975: அமெ­ரிக்க விமானம் நியூயோர்க்கில் வீழ்ந்­ததில் 113 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

1981: 17 ஆண்­டு­க­ளாக உலகின் மிக நீள­மான தொங்கு பால­மாக இருந்த ஹம்­பர் பாலம் இங்­கி­லாந்தில் அமைக்­கப்­பட்­டது.

1983: அமெ­ரிக்­காவின் முத­லா­வது விண்­வெளி வீராங்­கனை சாலி ரைட் தனது முத­லா­வது பய­ணத்தை முடித்துக் கொண்டு பூமி திரும்­பி­னார்.

2002: தான்­சா­னி­யாவில் இடம்­பெற்ற ரயில் விபத்தில் 281 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

2004: நியூயோர்க்கில் மரண தண்­டனை சட்­டபூர்வமற்­ற­தாக்­கப்­பட்­டது.

2007: பாகிஸ்­தானின் கராச்சி நகரில் மழை மற்றும் சூறாவ­ளியில் 200 இற்கும் மேற்­பட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­த­னர்.

2010: விம்­பிள்டன் டென்னிஸ் தொடரில் அமெ­ரிக்­காவின் ஜோன் ஐஸ்­னர், பிரான்ஸின் நிக்­கலஸ் மஹுட் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான போட்டி 11 மணித்­தி­யா­லங்கள், 5 நிமி­டங்­க­ளுக்கு நீடித்­தது. தொழில்­சார் டென்னிஸ் வர­லாற்றில் மிக நீண்­ட­நேரம் நீடித்த போட்டி இது. இதில் ஜோன் ஐஸ்­னர் வென்­றார்.

2013: இத்­தா­லியின் முன்னாள் பிர­த­மர் சில்­வியோ பேர்லுஸ்­கோனி, அதி­கார துஷ்­பி­ர­யோகம் மற்றும் வயது குறைந்த பாலியல் தொழி­லா­ளி­யுடன் பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டமை ஆகியவை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார். அவருக்கு 7 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2018: சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவதற்கான தடை உத்தியோக பூர்வமாக முடிவுக்கு வந்தது. அதுவரை வாகனம் செலுத்த பெண்களை அனுமதிக்காத உலகின் ஒரே நாடாக சவூதி அரேபியா இருந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!