உலக மகளிர் ஹொக்கி தொடரில் இந்திய மகளிர் அணி சம்பியன்

0 3,715

ஜப்­பானின் ஹிரோ­ஷி­மாவில் நடை­பெற்­று­வரும் மகளிர் உலக ஹொக்கி தொடரில் இந்­தியா சம்­பி­ய­னா­னது.ஜப்­பா­னுக்கு எதி­ராக நேற்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் இந்­தியா வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.

இந்­தியா சார்­பாக போட்­டியின் 3ஆவது நிமி­டத்தில் பெனல்டி கோர்ணர் மூலம் அணித் தலைவி ராணி ராம்பால் முத­லா­வது கோலைப் போட்டார். ஜப்பான் சார்­பாக எட்டு நிமி­டங்கள் கழித்து கெனன் மோரி கோல் நிலையை சமப்­ப­டுத்­தினார்.

போட்­டியின் மூன்­றா­வது கால்­மணி நேர நிறை­வின்­போது (45 நி.) இந்­திய வீராங்­கனை குர்ஜித் கோர் கோல் போட்டு கோல் நிலையை 2–1 என ஆக்­கினார்.

மேலும் 15 நிமி­டங்கள் கழித்து பெனல்டி கோர்ணர் மூலம் குர்ஜித் கோர் கோல் போட இந்­தியா 3–1 என வெற்­றி­பெற்று சம்­பி­ய­னா­னது.இறுதிப் போட்­டியில் விளை­யா­டிய இந்­தி­யாவும் ஜப்­பானும் டோக்­கியோ 2020 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவுக்கான ஹொக்கி தகுதிகாண் சுற்றில் விளையாடவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!