பிக் பொஸ் தமிழ் 3வது சீசன் போட்டியாளர்களின் முழு விபரங்கள்

0 1,304

உலக நாயகன் கமல்ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் சீசன் 3 ஆரம்பமாகிவிட்டது.  ஜூன் 23  ஞாயிற்றுக்கிழமை முதல் 100 நாட்களுக்கு விஜய்  தொலைக்காட்சியில் பிக் பொஸ் 3 (Bigg Boss season 3) ஒளிபரப்பாக உள்ளது.

பிகபாஸ் 3 போட்டியாளர்கள்  பிக் பொஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள்.

பிக்பொஸ் தமிழ் 3வது சீசனில் நடிகை நடிகர் செய்தி வாசிப்பாளர் மொடல்என பல்வேறு வித்தியாசமான துறைகளைச் சேர்ந்த 15 பேர் போட்டியாளராக பங்கேற்கின்றனர்.  பிக்பொஸ் 3 போட்டியாளர்கள் விபரம்

பாத்திமா பாபு

பாத்திமா பாபு  தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் கே,பாலச்சந்தரின் கல்கி திரைப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் , அதன்பின் பல திரைப்படங்கள் நடித்தார். கமல்ஹாஸனுடன் ஆளவந்தான் திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்கு பெயர் போனவர். அதிமுக கட்சியில் இணைந்து கட்சிப்பணி ஆற்றியவர்.

 

லொஸ்லியா

இலங்கையரான லொஸ்லியாவும் இம்முறை பிக்பொஸ்  போட்டியாளராக களமிறங்கியுள்ளார், திருகோணமலையைச் சேர்ந்த அவர் சக்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் மற்றும் செய்திவாசிப்பாளராகவும் பணியாற்றியவர்,

பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றும் முதல் இலங்கையர் மாத்திரமல்லாமல் இந்தியர் அல்லாத முதல் போட்யொளரும் லொஸ்லியா தான்,

சாக்‌ஷி அகர்வால்

பிக்பாஸ் மூன்றாவது போட்டியாளர். இவர் சென்னை யுவதி ஆவார், இவர் பெங்களுரில் மொடலாக பணியாற்றி பின் சினிமாவுக்குள் நுழைந்தார். கன்னட படமொன்றில் அறிமுகமான அவர் பின் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் பணியாற்றி வந்தார்.  

பலவிளம்பர படங்களிலும்  மொடலிங்கிலும் கலக்கி வந்தார். சென்னையில் செட்டிலான இவர் விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்துள்ளார்.  ரஜினியின் காலா திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்து புகழ் பெற்றார்.

 

மதுமிதா

பிக்பொஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ள மதுமிதா தமிழ் சினிமா கொமெடி நடிகை. ஒரு கல் ஒரு காண்ணாடி படத்தில் அறிமுகமாகி புகழ் பெற்றவர்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமார படத்தில் இவர் நடிப்பு பேசப்பட்டது.  தமிழ் சினிமாவில் திறமையான நகைச்சுவை நடிகைகள் இல்லை என்ற குறையை போக்கியவர்.  அண்மையில்  இவருக்கு திருமணம் நடைபெற்றது.

 

கவின்

தொலைக்தொடர்களில் ஹிரோவாக நடித்து புகழ் பெற்றவர். விஜய்  தொலைக்காட்சித் தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர்.  தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் புகழ் பெற்ற பின் சினிமாவில் “நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் மூலம் ஹிரோவானார். இப்படம் மூன்று வருடங்கள் தயாரிப்பு பிரச்சனைகளில் சிக்கி மிகச் சமீபத்தில் வெளியாகியது,

தனது பிறந்த தினமான ஞாயிறன்று  போட்டியாளராக பிக் பொஸ்  வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

அபிராமி வெங்கடாச்சலம்

மொடலாக பணியாற்றும் அபிராமி வெங்கடாச்சலம்  விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர்  தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார். சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர்.

தல அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் மிக முக்கிய  பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

சரவணன்

தமிழ் சினிமா 80களில் கதாநாயகன். அப்போதைய காலகட்டத்தில் கார்த்திக், பிரபு , ராமராஜனுடன் போட்டிபோட்ட கதாநாயகர்களில் ஒருவர் சரவணன்.

தமிழ் சினிமாவில் 20 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து ள்ளார்,  இடையில் பல காலமாக காணாமல் போயிருந்த அவர் இயக்குநர் பாலா இயக்கிய நந்தா திரைப்படத்தில் வில்லனாக ஒரு சிறு வேடத்தில் நடித்தார். பின் அமீர்  இயக்கிய பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு மாமாவாக நடித்ததன் மூலம் பிரபலமானார். மீண்டும் சினிமாவில் பிஸியாகி பல படங்களில் கேரக்டர் ரோல்களில் வலம் வந்தார்.

 

வனிதா விஜயகுமார்

நடிகர் விஜய்குமாரின் மகளான வனிதா விஜயகுமார்  மாணிக்கம் படத்தில் ராஜ்கிரன் ஜோடியாக ஹிரோயினாக அறிமுகமானவர்.

இவரது திருமண வாழ்க்கை மற்றும் விஜய்குமார் குடும்பத்துடனும் பிரச்சனைகளில் சிக்கி னார், நடிகர் விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனைகளில் பொலிஸ் நீதிமன்றம் என பெரும் பிர்ச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கியவர். விஜயகுமார் கமலுக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் இவர் மிக முக்கிய போட்டியாளராக உள்ளார்.

 

சேரன்

தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான சேரன் இம்முறை பிக் பொஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ளமை பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது,

இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சேரன் பாரதிக் கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்,

 ஆட்டோகிராப் படம் மூலம் நடிகராக மாறினார். தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர்,  இறுதியாக திருமணம் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

 

ஷெரீன்

நடிகை ஷெரீன் படிப்பிற்குப் பின் 16 வயதில் துருவா எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். அதே வருடத்தில் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார்.

தனுஷ், செல்வராகவனுக்கு திருப்புமுனையாக அமைந்த துள்ளுவதோ இளமை திரைப்படம் ஷெரினுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது.

தமிழ் ,கன்னடம் , மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

 

மோகன் வைத்தியா

கரனாடக பாடகர், இசைக் கலைஞர், வீணைக்கலைஞர். நாடக மேடைகளில் நடிக்க கூடியவர்.  தொலைக்காட்சித்  தொடர்களிலும் சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். புகழ்பெற்ற பாடகர் ராஜேஷ் வைத்தியாவின் சகோதரர் இவர்.

தொலைக்காட்சி தொடர்களில் காமெடி செய்து புகழ் பெற்றவர். அதிக அறிமுகமற்ற முகம் ஆனால் திறமை மிகுந்த ஒருவர் பிக் பஸுக்குள் நுழைந்துள்ளார். 60 வயதில் கலந்து கொள்ளும் ஒரே போட்டியாளர் இவர்தான்,

 

தர்ஷன் தியாகராஜா

தர்ஷன் தியாகராஜா  இலங்கையைச் சேர்ந்தவர், கணினி மென்பொருள் துறையில் பணியாற்றி மொடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர்.  இம்முறை  போட்டியாளர்களில் அதிக அறிமுகமற்ற  போட்டியாளர் இவர்தான். ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர். தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள் நுழைந்திருக்கிறார்.

 

சாண்டி

நடன இயக்குநர் சாண்டி   விஜய்  தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் வன் உட்பட நடனப்போட்டிகளில் நடன இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். பிக் பொஸ்ஸில் ஏற்கனவே கலந்து கொண்ட காஜலுடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

நடன இயக்குநராக சினிமாவில் அறிமுகமான சாண்டி  ரஜினியின் காலா படத்தில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து ஷோக்களில் கொமெடி செய்துள்ளார். தற்போது அவரே இந்த பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

 

முகேன் ராவ்

முகேன் ராவ் மலேஷியாவில் பிறந்து வளர்ந்த பாடகர்,   பல அல்பங்களில் பாடியுள்ளார். யூரியூப் வீடியோக்கள் இவரை புகழுக்கு அழைத்து சென்றன. தொடர்ந்து பாடலகள் எழுதி பாடி அல்பங்களை வெளியிட்டார்.

சிறிய ஏழ்மை குடும்பத்தில் பிறந்து ஒரு நல்ல இடத்தை தன் திறமையால் பெற்றவர்.  

 

ரேஷ்மா

 தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாக புகழ் பெற்றவர் ரேஷ்மா. இவர் மொடலாகவும் பணியாற்றியுள்ளார். சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாப்பாத்திரம் மிகப்பெரிய அளவில் இவரை பிரப்லப்படுத்தியது.,

கொமெடி நடிகர் யோகிபாபுவுடன் இவருக்கு காதலென்று ஒரு செய்தி பரவியது. செய்தியை மறுத்தவர். எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என தெரிவித்திருந்தார்,

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!