மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம்; கால் இறுதிகளில் பிரான்ஸ், இங்கிலாந்து

0 135

பிரான்ஸில் நடைபெற்றுவரும் எட்டாவது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் கால் இறுதிப் போட்டிகளில் விளையாடுவற்கு வரவேற்பு நாடான பிரான்ஸுடன் இங்கிலாந்தும் தகுதிபெற்றுள்ளது.

பிரான்ஸுக்கும் பிரேஸிலுக்கும் இடையில் லே ஹாவ்ரே விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் மேலதிக நேரத்தின்போது போடப்பட்ட கோலின் உதவியுடன் பிரான்ஸ் 2 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

பிரான்ஸ் சார்பாக 52ஆவது நிமிடத்தில் வெலரி கோவின் முதலில் கோல் போட்டார். அடுத்த 11ஆவது நிமிடத்தில் பிரேஸில் சார்பாக தாய்சா கோல் நிலையை சமப்படுத்தினார்.

இப் போட்டி முழு நேரத்தைத் தொட்;டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்தன. இதனை அடுத்து மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்தில் (107 நி.) அமண்டைன் ஹென்றி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு பிரான்ஸை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் கால் இறுதியில் விளையாடும் வாய்ப்பை பிரான்ஸ் பெற்றது.

கெமரூனின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்துக்கும் கெமரூனுக்கும் இடையில் வெலென்சினெஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து 3 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்று கால் இறுதிக்குள் நுழைந்தது.

இங்கிலாந்து சார்பாக ஸ்டெவ் ஹூட்டன் (14 நி.), எலென் வைட் (49 நி. உபாதையீடு நேரம்), அலெக்ஸ் க்றீனோட் (58 நி.) ஆகியோர் கொல்களைப் போட்டனர். இப்போட்டியில் அளிக்கப்பட்ட சில தீர்ப்புகள் கெமரூன்  வீராங்கனைகளை ஆத்திரமூட்டின.

இப்போட்டியின் இரண்டாவது கோலை இங்கிலாந்து வீராங்கனை எலன் வைட் புகுத்தினார். முதலில் அது ஓவ் சைட் கோல் என உதவி மத்தியஸ்தர் அறிவித்தார். எனினும் வீடியோ மத்தியஸ்தர் அத்தீர்ப்பை நிராகரித்து, அதை கோல் ஆக அறிவித்தார்.

அதேவேளை கெமரூன் வீராங்கனை அஜா என்சோட் கோல் ஒன்றை புகுத்தியதாக கெமரூன் வீராங்கனைகள் கருதினர். ஆனால், வீடியோ பரிசீலனை மூலம் அது ஓவ் சைட் கோல் என அறிவிக்கப்பட்டது.  இத்தீர்ப்புகளுக்கு கெமரூன் வீராங்கனைகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!