புதன்கிழமை முதலாவது வாக்குமூலப் பதிவு ரிஷாத்திடம்!

0 212

                                                                                                                                     (ஆர்.யசி)

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நாளை மறுதினம் (26) வாக்குமூலம் வழங்க முன்னாள் அமைச்சரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடவுள்ளது. இதன்போது முதலாவதாக வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழைக்கப்படவுள்ளார். அதேபோல் மேலும் இரு அரச அதிகாரிகளும் வரவழைக்கப்படவுள்ளதாக தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்துவரும் விசாரணைகளில் அரசியல் தரப்பினர் மற்றும் தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் இஸ்லாமிய மத அமைப்புகளை வரவழைக்க தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்குழு கூறுகின்றது. எனினும் இந்த தெரிவுக்குழு முன்னிலையில் தம்மை அழைத்து வாக்குமூலம் பெற வேண்டும் என பொதுபலசேனா உள்ளிட்ட சில அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!